உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இளம் உயிர்களைப் பறிக்கும் வீதி விபத்துகள்: அதிக வேகம், சாகச ஓட்டமே பிரதான காரணம் என வைத்தியர் த.சத்தியமூர்த்தி கவலை..!

speeding and reckless driving blamed for rising road deaths among youth says dr t sathiyamoorthy | Pathivu News

வீதியை சாகசம் செய்யும் இடமாக கருதி , ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் இளைஞர்கள் , விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதாகவும், கடந்த மாதம் மாத்திரம் வடக்கில் 09 இளைஞர்கள் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக வடமாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன.

தற்கொலைகள் ஒருபுறமும், வீதி விபத்துகள் மறுபுறமும் பல குடும்பங்களிடமிருந்து பெறுமதியான இளம் உயிர்களைப் பறித்துச் செல்கின்றன.

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் வடமாகாணத்தில் 9 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்த சம்பவங்களை அடையாளம் காண முடிகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அவதானிப்பின்படி, இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சில கடுமையான விபத்துகளில் மது அருந்துதல், அதிக வேகம் மற்றும் வீதியை சாகசம் செய்யும் இடமாகக் கருதும் ஆபத்தான மனப்பாங்கு முக்கியமான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.

விடுமுறை மற்றும் கொண்டாட்டக் காலங்களிலும் இத்தகைய ஆபத்தான நடத்தைகள் குறித்து அதிக கவனம் தேவை.

குறிப்பாக புதிய மோட்டார் சைக்கிள்களை வாங்கும் சில இளைஞர்கள் அவற்றின் வேகம் மற்றும் திறனைச் சோதிக்கும் விதத்தில் வீதிகளில் சாகசம் செய்ய முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.

சட்ட வைத்திய நிபுணரின் மருத்துவ அனுபவத்தில், இவ்வாறான ஆபத்தான ஓட்டுநர் நடத்தையுடைய சிலர் பின்னர் கடுமையான விபத்துகளுக்கு உள்ளாகி சட்ட வைத்திய உடற்கூற்றுப் பரிசோதனைக்கு வரும் துயரமான நிலையும், அல்லது உயிர் தப்பினாலும் கடுமையான மூளைக் காயங்களுடன் நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவில் நீண்டகால உடல் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுடன் சிகிச்சை பெறும் நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸார் கண்காணிப்பு, சோதனை மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சட்டம் மட்டும் உயிர்களைக் காப்பாற்ற முடியாது. ஒவ்வொரு வாகன ஓட்டுநரிடமும் பொறுப்புணர்வு உருவாக வேண்டும்.

* வீதி பந்தயத் திடல் அல்ல.
* வாகனம் ஓட்டும்போது தொலைபேசியில் காணொளி எடுப்பது , செல்பி எடுக்க வேண்டாம்.
* மது அருந்தியிருந்தால் வாகனத்தைத் தொடவே வேண்டாம்.
* தரமான தலைக்கவசத்தை முறையாக அணியுங்கள்.
* தேவையற்ற வேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனங்களை முந்தி செல்ல வேண்டாம்.
* பெற்றோர்களும் குடும்பத்தினரும் இளைஞர்களுடன் வீதிப் பாதுகாப்பைப் பற்றித் தொடர்ந்து பேசுங்கள்.

ஒரு விபத்து ஒரு இளைஞரின் உயிருடன் முடிவதில்லை. பெற்றோரின் கனவுகள், குடும்பத்தின் எதிர்காலம், நண்பர்களின் மகிழ்ச்சி – அனைத்தையும் ஒரே நொடியில் மாற்றிவிடுகிறது.
வேகத்தில் வீரத்தைக் காட்ட வேண்டாம்.

பாதுகாப்பாக வீடு திரும்புவதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊