உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஓய்வுபெற்றுள்ள முன்பள்ளி ஆரிரியர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்..! அரும்பு அமைப்பின் ஸ்தாபகர் ந.சச்சிதானந்தன் வேண்டுகோள்

arumbu founder n sachithanandan urges government to support retired preschool teachers | Pathivu News

கடந்த 35-40வருடங்களாக முன்பள்ளிச் சிறார்களின் நலனுக்காக பாடுபட்டு தற்போது ஓய்வு நிலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்பதுடன் அந்த ஆசிரியர்களிடம் கல்வி கற்று இன்று நல்ல நிலையில் இருப்பவர்களும் அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என அரும்பு முன்பள்ளி கல்வி மேம்பாட்டு அமையத்தின் ஸ்தாபகர் நடராசா சச்சிதானந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

புலம்பெயர் உறவுகளுடைய பெரு முயற்சியில் யாழ் பல்கலைக்கழகம்,வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச டிப்ளோமா பயிற்சி இடம்பெறுகின்றது.இதற்கான நிதி அனுசரணைகளை புலம்பெயர் மக்கள் மற்றும் அமைப்புக்கள் பொறுப்பேற்றுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 100முன்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியை பெற ஆரம்பித்திருந்தனர். காலப்போக்கில் அவர்களில் 50 முன்பள்ளி ஆசிரியர்கள் கிழக்கு பல்கலைக்கழகம் சென்று வருவதற்கான போக்குவரத்துச் செலவை ஈடுசெய்ய முடியாமல் பயிற்சியை இடைநடுவே கை விட்டு விட்டனர் என்ற துயரமான செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

அடுத்த வருடம் இவ்வாறான டிப்ளோமா பயிற்சியை பல்கலைக்கழகம் ஊடாக வழங்கும் போது தேவைப்பாடு உடைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போக்குவரத்த கொடுப்பனவுகளும் எமது புலம்பெயர் உறவுகளுடைய அனுசரணை ஊடாக வழங்கி வைக்கப்படும் என்ற நற் செய்தியை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இதுவரை வடக்கு -கிழக்கு மாகாணத்தில் 400வரையான முன்பள்ளி ஆசிரியர்களே எமது சேவை ஊடாக டிப்ளோமா பயிற்சியை பெற்றுள்ளனர்.
ஆனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 3200முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 6ஆயிரம் தொடக்கம் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுபவர்களாக உள்ளனர்.

ஆனால் கடந்த 4வருடங்களாக நாம் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக ஏற்படுத்திய விழிப்புணர்வின் பயனாக அரசாங்கம் படிப்படியாக முன்பள்ளி ஆசிரியர்கள் விடயத்தில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.தற்போது முன்பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்பள்ளிகளை தேசியமயப்படுத்தும் வரை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.மகளிர் விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன் பல ஆண்டுகளாக சேவையாற்றி தற்போது ஓய்வில் இருக்கும் முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவமான வாழ்க்கையை வாழ அரசாங்கம் மற்றும் பழைய மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊