உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் தப்பிச் சென்ற கைதி நஞ்சருந்திய நிலையில் கைது..!

escaped prisoner arrested after consuming poison at mallakam court | Pathivu News
யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்ற விளக்கமறியல் கைதி , நஞ்சருந்திய நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு , மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் வழக்கு விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு சிறைக்காவலர்களால் அழைத்து வரப்பட்டுள்ளார்
அதன் போது , நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
தப்பி சென்றவரை தேடி மீள கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை , காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் மீள கைது செய்யப்பட்டார்.
பொலிஸார் குறித்த நபரை சுற்றிவளைத்து கைது செய்ய முற்பட்ட வேளை , தன் வசம் வைத்திருந்த நஞ்சு பாதார்த்ததை அவர் அருந்தியுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பொலிசார் அவரை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , அது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டனர்
அதனை தொடர்ந்து , வைத்தியசாலைக்கு சென்று கைதியை நேரில் பார்வையிட்ட நீதவான் , கைதியின் விளக்கமறியலை 20ஆம் திகதி வரையில் நீடித்தார்
அந்நிலையில் குறித்த விளக்கமறியல் கைதி , சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊