புதியவை உலகம் முக்கிய செய்திகள்

கனடாவில் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு மகிழுந்துகள் தீக்கிரை..!

canada mp car fire | Pathivu News
லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு மகிழுந்துகள் இனம் தெரியாத விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டன.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் வசிக்கும் பல்லின மக்களால் நன்கு விரும்பப்பெறும் பெண்மணியான லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களின் ஸ்காபுறோ இல்லத்திற்கு முன்பாக அவரது இரண்டு மகிழுந்துகள் இன்று 27.08.2026 ம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டன என்ற செய்தி அறிந்து எமது செய்தியாளர் காலை சம்பவம் இடம்பெற்ற அவரது இல்லத்திற்குச் சென்றார்.
அந்த இடத்தில் சுமார் 6 வாகனங்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த வேளையில் உடனடியாக செய்தி அறிந்து அங்கு விரைந்து வந்த ரொறன்ரோ தீயணைப்புப் பிரிவினர் இரண்டு வாகனங்கள் எரிந்த நிலையில் தீயை அணைத்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார.
சோகமும் அச்சமும் கொண்ட நிலையில் எம்மோடு உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் தீயணைப்பு படை மற்றும் ரொறன்ரோ காவல் துறை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் மார்பகப் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சையின் பின்னர் தேறிய நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவரது மூத்த புதல்வரின் திருமணத்தை சிறப்பாக நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கனடியப் பிரதமர் மற்றும் ரொறன்ரோ மேயர் ஆகியோர் கண்டன அறிக்கைகளை தமது செய்தி தளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp