உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு, இரண்டு குழந்தைகள் காயம்

  • Jan 17, 2026 - 09:14 AM
  • 0 Comments

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். நான்கு வயதுடைய ஆண் குழந்தையும், மூன்று வயதுடைய பெண் குழந்தையும் காயங்களுடன் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியட்சகர் எப். யு. வூட்லர் தெரிவிப்பதன்படி, நேற்று இரவு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பூசாவில் கலவரம் – கைதிகள் இடமாற்றம்

  • Jan 17, 2026 - 09:10 AM
  • 0 Comments

பூசா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை பிற சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்ததாவது, நேற்று மாலை பூசா சிறைச்சாலையின் டி பிரிவின் கூரையின் மீது ஏறிய கைதிகள் குழு ஒன்று, சிறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன்போது சிறைச்சாலை சொத்துகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர். சிறை அதிகாரிகளும் பொலீஸாரும் தலையிட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார். கலவரத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மீன் கழிவு இனி வீணல்ல – மீனவர்களுக்கு புதிய சட்டம்

  • Jan 17, 2026 - 09:08 AM
  • 0 Comments

மீனவர்கள் தங்களின் மீன் பிடிப்பின் போது உருவாகும் மீன் கழிவுப் பொருட்களை கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் என புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கோப் குழு தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார். இதற்காக, மீனவர்கள் இந்த மீன் கழிவுகளை ஒப்படைக்கக்கூடிய வகையில் குறிப்பிட்ட சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், மீனவர் பிடித்த மீனை கொண்டு வர பயன்படுத்தப்படும் கொள்கலன்களை மீண்டும் ஒப்படைக்கத் தவறும் மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தந்தையை அடித்தே கொன்ற மகன் கைது

  • Jan 17, 2026 - 09:01 AM
  • 0 Comments

அனுராதபுரம் மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தனது தந்தை தலையில் காயங்களுடன் வீட்டின் முற்றத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைய மகன் கண்டுள்ளார். உயிரிழந்தவர் மூத்த மகனுடன் மது அருந்தியுள்ளதாகவும், ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டைத் துண்டால் தாக்கி இந்தக் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குற்றங்களுக்கு கடிவாளம், போதைக்கு புயல்: 2025ல் 82 இலட்சம் பேரை சோதித்த பொலிஸ்

  • Jan 16, 2026 - 06:37 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தகவல்களை வெளியிட்டார். அவரின் தகவலின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சோதனை மற்றும் நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலான கேள்விகளின் போது, 8.2 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் மூலம், பல்வேறு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

6ம் வகுப்பு – ஆடம்பரம் அல்ல… அவசரம்!” கல்வி சீர்திருத்தம் கோரி பெற்றோர் போராட்டம்

  • Jan 16, 2026 - 06:21 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, இன்று பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்மொழியப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கல்வி சீர்திருத்த கல்வி முறையை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த ஆண்டிலேயே கல்வி மாற்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் மேலும் தாமதங்களால் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்த பெற்றோர், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யுத்தத்தின் நிழலில் நசுங்கிய குடும்பங்களுக்கு நிழலாகும் வீடு – ஜனாதிபதியின் புதிய தொடக்கம்

  • Jan 16, 2026 - 01:30 PM
  • 0 Comments

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை ; வீடின்றி வாழ்ந்து வரும் 2,500 குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிய வீடுகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தாhர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று யாழ்ப்பாணம், சாவகச்சேரி அருகே உள்ள மீசாலை கிராமத்தில் 2026 தேசிய வீட்டு நிர்மாணத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. தமக்கென ஓர இடம் – அழகான வாழ்க்கை’ என்ற முன்னோக்கிய தலைப்பில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டெங்கும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எலோன் மஸ்க் Grok-ஐ பெண்கள் பாதுகாப்புக்காக மாற்றுகிறார்: ஆபாசப்பட மாற்றம் நிறுத்தம்!

  • Jan 16, 2026 - 12:40 PM
  • 0 Comments

கீழ் வரும சமீபத்தில், எலோன் மஸ்க் தலைமையிலான ஏ.ஐ. கருவியானது கிராக்க் ஊடாக பெண்கள் படங்களை ஆபாசமாக காட்டும் வகையில் மாற்றம் செய்யும் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. இது பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக இருக்கும் வகையிலும், பெண்கள் மீது செய்யப்பட்ட பாலியல் தாக்குதலாக கருதப்பட்டது. இந் நிலையில் எக்ஸ் நிறுவன அறிவிப்பில், கிராக்க் கணக்கில் உண்மையான மனிதர்களின் படங்களை மாற்றுவதை தடுக்கும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறப்பட்டது. இங்கிலாந்து அரசு இதை ‘வாழ்த்துக்குரிய முன்னேற்றம்’ என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கேபிள் கார் திட்டம் சிதறல்: சீன நிறுவனம் விலகி சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றது.

  • Jan 16, 2026 - 09:17 AM
  • 0 Comments

அம்புலுவாவா கேபிள் கார் திட்டத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த அம்பர் அட்வென்சர்ஸ் நிறுவனம் விலகியமை தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெடி தெரிவித்துள்ளார். டிட்வா புயலுக்குப் பின்னர் சுற்றுச்சூழல் அமைப்புகள் முன்வைத்த முறைப்பாடுகளை அடுத்து, அம்புலுவாவா சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயத்தில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி இன்றி கட்டுமானங்கள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், நிபுணர் மதிப்பீடு முடியும் வரை அனைத்து […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கண்டியில் நடைபாதைகள் விற்பனைக்கு வரமாட்டா: முதல்வர் சந்திரசிறி எச்சரிக்கை

  • Jan 16, 2026 - 09:13 AM
  • 0 Comments

கண்டி மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நடைபாதைகளில் வியாபாரம் செய்வது தொடர்பில் மோசடி நடைபெறுவதாக கண்டி மாநகர முதல்வர் சந்திரசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார் கண்டி மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நடைபாதைகளில் வியாபாரம் செய்து வந்த முன்னாள் தெரு வியாபாரிகளுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வியாபாரிக்கும் தலா 100 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இடங்கள் வழங்கப்பட்டு, அவற்றுக்காக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர சபையின் கோரிக்கைக்கு அமைவாக நடைபாதை வியாபாரிகள் 71 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp