உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு, இரண்டு குழந்தைகள் காயம்

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

நான்கு வயதுடைய ஆண் குழந்தையும், மூன்று வயதுடைய பெண் குழந்தையும் காயங்களுடன் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியட்சகர் எப். யு. வூட்லர் தெரிவிப்பதன்படி,

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சந்தேக நபர்கள் முச்சக்கரவண்டியில் ஜிந்துபிட்டி சந்திக்கருகிலுள்ள ஒரு இடத்தில் நிலைக்கொண்டிருந்து, அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முனனெடுத்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்