உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய சட்டம், பழைய அடக்குமுறை? மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

  • Jan 19, 2026 - 08:36 PM
  • 0 Comments

பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காக்கும் சட்டம்’ அடக்குமுறைகளைத் தான் மீண்டும் கொண்டுள்ளதா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. நீதியமைச்சால் 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்த சட்ட முன்மொழிவு, 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு நவீன மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பழைய சட்டம், சித்திரவதை, தன்னிச்சையான கைது, வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் சிறுபான்மை மக்களையும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்க பயன்படுத்தப்பட்டதாக நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மீண்டும் மின்னியது தங்க விலை

  • Jan 19, 2026 - 01:34 PM
  • 0 Comments

கடந்த வாரமாக நிலையாக இருந்த தங்க விலை, இன்றோடு மீண்டும் உயர்வடைந்துள்ளது. இன்று (19) 24 கரட் தங்கத்தின் பவுண் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 24 கரட் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரஜா சக்தி திட்டம் முறை விளக்கம்

  • Jan 19, 2026 - 01:10 PM
  • 0 Comments

கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரவலுவூட்டல் அமைச்சின் ‘பிரஜா சக்தி’ திட்டம், உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கை அல்ல என அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் கிராம அபிவிருத்தி செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையையும், பொதுமக்கள் பங்கேற்பையும் அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், இந்தத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிறுவனங்களின் அதிகாரங்களைத் தடுக்கிறது என குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அமைச்சு இவ்விளக்கத்தை வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நுரைச்சோலை நிலக்கரி விவகாரம் பரபரப்பு

  • Jan 19, 2026 - 01:05 PM
  • 0 Comments

நுரைச்சோலை மின் நிலைய உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பான சர்ச்சையில்இ வெளிநாட்டு ஆய்வுகூட அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜகோடாஇ நெதர்லாந்தின் ‘கொட்டெக்னா’ ஆய்வுகூடம் தயாரித்த அறிக்கை ஜனவரி 16ஆம் திகதிக்குள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட போதும்இ இதுவரை வெளியிடப்படாதது அரசியல் தலையீட்டால் என குற்றஞ்சாட்டினார். உள்ளூர் ஆய்வுகூடம் நிலக்கரி தரமற்றது என்றும்இ சுற்றுச்சூழலுக்கும் மின் நிலைய இயந்திரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறிய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா சுங்க வாரியால் உலக அச்சுறுத்தல்

  • Jan 19, 2026 - 12:50 PM
  • 0 Comments

அமெரிக்கா உலக நாடுகளை அநியாய சுங்க வரிகள் மூலம் அச்சுறுத்தி வருவதை ஐரோப்பா இப்போது உணரத் தொடங்கியுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது அரசியல் ஆதிக்கக் கொள்கைகளுக்கு நாடுகளை கட்டாயப்படுத்த சுங்க வரிகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்கே, குற்றஞ்சாட்டினார். கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெப்ரவரி 1 முதல் 10 சதவீத சுங்க வரி […]

சாவு அறிவித்தல்!

அமரர் தவசி. செல்லையா2026/01/17அன்று இறைபதமடைந்தார். அன்னார்

  • Jan 18, 2026 - 09:19 AM
  • 0 Comments

நுணாவிலைப் பிறப்பிடமாகவும் ஆவரங்கால் கிழக்கு மணற்பகுதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தவசி. செல்லையா2026/01/17அன்று இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான தவசி, வள்ளிப்பிள்ளைஆகியோரின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான பசுவதி, கோமளேஸ்வரி, மற்றும் பொன்னுத்துரை ஆகயோரின் அன்புச் சகோதரரும் காலம்சென்ற பாக்கியம் மற்றும் தங்கறாணி ஆகியோரின் பாசமிகு கணவரும் அசோகன், சுகந்தினி காலம்சென்றவர்களான அன்பழகன் , மதியழகன், உதயகுமார் , மற்றும் சுயாதரன், மாலினி, சித்திரா(German), தயீதரன், சுவீதரன், தசாயினி(ப்ரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • Jan 18, 2026 - 08:32 AM
  • 0 Comments

ஆறாம் வகுப்பு ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச இணையதள இணைப்பு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட தரப்பினரிடமிருந்து விசாரணை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத் தகவல்களின்படி, தேசிய கல்வி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உட்பட ஆறு பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கல்வி நிறுவத்தின் கல்வி விவகாரப் பிரிவுடன் இணைந்து பாடத்தொகுப்பை தயாரித்த எழுத்தாளர்கள், அதனை பரிசீலனை செய்தவர்கள், தொகுத்தவர்கள் மற்றும் சரிபார்த்த அதிகாரிகளும் அடங்குகின்றனர். இதனிடையே, தேசிய கல்வி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிலுவையிலுள்ள 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் மார்ச்சில் விநியோகம்

  • Jan 18, 2026 - 08:29 AM
  • 0 Comments

அட்டைப் பற்றாக்குறை காரணமாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சுமார் 5 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில், அச்சிடப்பட்ட இந்த அனுமதிப் பத்திர அட்டைகள் தபால் திணைக்களம் ஊடாக விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். அட்டைத் தட்டுப்பாடு காரணமாக, நிரந்தர சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் பணி இடைநிறுத்தப்பட்டு, தற்காலிக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்.

  • Jan 18, 2026 - 08:27 AM
  • 0 Comments

ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தனது 63 ஆவது வயதில் காலமான நந்தன குணதிலக்க, 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி பாணந்துறையில் பிறந்தார். 1982 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி சார்பில் போட்டியிட்டார். நீண்டகாலம் அக்கட்சியின் நிர்வாகச் செயலாளராகவும் […]

ஆசிரியர் கருத்துக்கள்

புள்ளிவிவரங்களுக்கு அப்பால் விரியும் யதார்த்தம்: 2026-ன் பொருளாதார மீட்சியும் சாமானியனின் சவால்களும்!

  • Jan 18, 2026 - 08:11 AM
  • 0 Comments

2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் இலங்கை காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் களங்கள் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதை இன்றைய முக்கிய செய்திகள் கோடிட்டுக் காட்டுகின்றன. ஒருபுறம், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் மற்றும் சுற்றுலாத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி (ஜனவரி முதல் இரு வாரங்களில் 1.3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை) போன்றவை தேசம் மீட்சியடைந்து வருவதற்கான ஆரோக்கியமான அடையாளங்களாகத் தெரிகின்றன. இருப்பினும், இந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp