உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா சுங்க வாரியால் உலக அச்சுறுத்தல்

e0ae85e0aeaee0af86e0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aebe e0ae9ae0af81e0ae99e0af8de0ae95 e0aeb5e0aebee0aeb0e0aebfe0aeafe0aebee0aeb2e0af8d | Pathivu News

அமெரிக்கா உலக நாடுகளை அநியாய சுங்க வரிகள் மூலம் அச்சுறுத்தி வருவதை ஐரோப்பா இப்போது உணரத் தொடங்கியுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தனது அரசியல் ஆதிக்கக் கொள்கைகளுக்கு நாடுகளை கட்டாயப்படுத்த சுங்க வரிகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்கே, குற்றஞ்சாட்டினார்.

கிரீன்லாந்தை கைப்பற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெப்ரவரி 1 முதல் 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்றும், அது 25 சதவீதமாக உயரலாம் என்றும் அறிவித்துள்ளார்.

இதனை குறித்த நாடுகள் கண்டித்துள்ளன.

ரஷ்யா மற்றும் ஈரானுடன் வர்த்தகம் செய்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்க வரிகளை முன்பு ஐரோப்பா விமர்சிக்கவில்லை; ஆனால் இப்போது தாமும் இலக்காகியுள்ளதால் எதிர்ப்பை வெளியிடுகிறது என வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற அமெரிக்க நடவடிக்கைகள் உலகளவில் எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் இலங்கையும் அமெரிக்காவின் பாகுபாடான சுங்க கொள்கைகளால் பாதிக்கப்படுவதாகவும், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்பது பொருளாதார பயங்கரவாதம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச அணுகுமுறை உலக நாடுகளின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp