உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முற்றுப் பெற்றதா மருத்துவர் போராட்டம்? – நாளை தொடங்குமா அடுத்தக்கட்ட ஆட்டம்?

  • Jan 25, 2026 - 06:27 AM
  • 0 Comments

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவ அதிகாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், சுகாதார அமைச்சர்; நலிந்த ஜயதிஸ்ஸ எழுத்துப்பூர்வமான உடன்படிக்கைகளை வழங்கியிருந்ததாகச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த […]

கட்டுரை செய்திகள்

கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம்: கோட்டாபயவின் அடிக்கல்லும் – அநுரவின் தொடர்ச்சியும்

  • Jan 23, 2026 - 12:27 PM
  • 0 Comments

இலங்கையின் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள ‘மணலாறு’ (Weli Oya) பிரதேசத்தில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு திட்டம் கிவுல் ஓயா (Kiwul Oya Reservoir Project). இத்திட்டம் தற்போது அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தால் மீண்டும் கவனத்தில் கொள்ளப்படுவது அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் ஆரம்பம் 2021 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சௌபாக்கிய தொலைநோக்கு” திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் […]

உள்ளூர் கட்டுரை செய்திகள்

கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம்: கோட்டாபயவின் கனவு – அநுரவின் செயல்வடிவம்?

  • Jan 23, 2026 - 12:09 PM
  • 0 Comments

இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைத் தீர்ப்பதற்காக நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு முக்கிய திட்டம் கிவுல் ஓயா (முறைரட ழுலய) நீர்த்தேக்கத் திட்டமாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கீழ் புதிய வேகத்தைப் பெறவுள்ளது. திட்டத்தின் பின்னணி (கோட்டாபய ராஜபக்ச காலம்): முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘சௌபாக்கிய தொலைநோக்கு’ (ஏளைவயள ழக Pசழளிநசவைல யனெ ளுpடநனெழரச) […]

இந்தியா செய்திகள்

 தமிழகத்தில் தீவிரமடையும் கூட்டணிக் களம் – அமித் ஷா சென்னை வருகை?

  • Jan 23, 2026 - 11:21 AM
  • 0 Comments

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்தில் கூட்டணிக் பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வடிவம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தரப்பில் தனது தற்போதைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், பாட்டாளி மக்கள் கட்சி (PMK) மற்றும் நாம் தமிழர் கட்சி (NTK) போன்ற […]

இந்தியா செய்திகள்

மும்முனைப் போட்டியா? அல்லது புதிய கூட்டணிக் கணக்கா? – ஒரு விரிவான பார்வை

  • Jan 23, 2026 - 11:18 AM
  • 0 Comments

  2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் முன்பெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான திமுக – அதிமுக மோதலுக்கு அப்பால், தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வருகை மற்றும் தேசியக் கட்சிகளின் வியூகங்கள் கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைத்துள்ளன திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி: தற்போதைய நிலவரப்படி, திமுக தனது கூட்டணியைத் தக்கவைப்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. இருப்பினும், “ஆட்சியில் பங்கு” […]

இந்தியா செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கீடு: கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

  • Jan 23, 2026 - 11:08 AM
  • 0 Comments

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ‘விசில்’ (Whistle) சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. நேற்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் விஜய், “மக்களின் குரலாக ஒலிக்கப்போகும் விசில் சின்னத்தை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஊழலற்ற ஆட்சிக்கான ஆரம்பம்” எனத் தெரிவித்துள்ளார். சின்னம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் டிவி கே தொண்டர்கள் […]

இந்தியா கட்டுரை

விசில்’ சின்னத்துடன் களமிறங்கும் விஜய் – அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்துமா?

  • Jan 23, 2026 - 11:04 AM
  • 0 Comments

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (ஜனவரி 22, 2026) ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் விசில் சின்னம்?விஜய் தரப்பில் வழங்கப்பட்ட விருப்பப் பட்டியலில் ஆட்டோ, பேட் போன்ற பல சின்னங்கள் இருந்தபோதிலும், தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தையே இறுதி செய்துள்ளது. இது தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிட்டதா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பில்லியன் டொலர் இலக்கு: இலங்கையின் புதிய அடுக்கு!

  • Jan 23, 2026 - 08:24 AM
  • 0 Comments

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து அந்தச் சபையின் தலைவர் அர்ஜின ஹேரத் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் எண்ணெய் சுத்திகரிப்பு, விவசாய உற்பத்திப் பொருட்கள், தரவு மையங்கள் மற்றும் இணையவழி பொருளாதார வலயங்கள் போன்ற துறைகளில் முக்கிய முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை 1.057 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளது. […]

செய்திகள் முக்கிய செய்திகள் விளையாட்டு

சுழலில் சுருண்ட இங்கிலாந்து: வாகை சூடியது இலங்கை

  • Jan 23, 2026 - 08:11 AM
  • 0 Comments

‘இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 19 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்களைக் குவித்தது. அபாரமாக விளையாடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்குப் பக்கபலமாக ஜனித் லியனகே 46 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சாரக் கொள்கை மாற்றம்: நுகர்வோர் சங்கத்தின் நிலைப்பாடு!

  • Jan 23, 2026 - 08:02 AM
  • 0 Comments

புதிய தேசிய மின்சாரக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் கருத்துக்கணிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம் என மின்சாரப் பாவனையாளர் சங்கம் கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, நாட்டின் மிக முக்கிய கொள்கை முடிவை எடுக்கும் கூட்டத்திற்கு வெறும் அரை மணி நேரத்திற்கு முன்பே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆறு பேர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுவில் மூன்று பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், இந்தக் கொள்கையைத் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp