உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பில்லியன் டொலர் இலக்கு: இலங்கையின் புதிய அடுக்கு!

e0aeaae0aebfe0aeb2e0af8de0aeb2e0aebfe0aeafe0aea9e0af8d e0ae9fe0af8ae0aeb2e0aeb0e0af8d e0ae87e0aeb2e0ae95e0af8de0ae95e0af81 e0ae87 | Pathivu News

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இது குறித்து அந்தச் சபையின் தலைவர் அர்ஜின ஹேரத் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டில் எண்ணெய் சுத்திகரிப்பு, விவசாய உற்பத்திப் பொருட்கள், தரவு மையங்கள் மற்றும் இணையவழி பொருளாதார வலயங்கள் போன்ற துறைகளில் முக்கிய முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கடந்த 2025-ஆம் ஆண்டில் இலங்கை 1.057 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 186 நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்த நிலையில், 146 திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 1.9 பில்லியன் டொலர்களாகும்.

இதில் 70 புதிய திட்டங்களும், ஏற்கனவே இயங்கி வரும் 76 நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களும் அடங்கும்.
முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்கவும், திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp