சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்-திருமதி தர்மதேவி செல்வராசா

  • Jan 31, 2026 - 07:50 PM
  • 0 Comments

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மதேவி செல்வராசா அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வராசா செல்லப்பா அவர்களின் பாசமிகு துணைவியும், பாலகுமார்(இங்கிலாந்து), துஷியந்தினி(கனடா), சுஜாந்தினி(இங்கிலாந்து), மனோத்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜீவராசா, காலஞ்சென்ற வரதராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும், பாமா(இங்கிலாந்து), மோகனதாஸ்(கனடா), சுரேந்திரன்(இங்கிலாந்து), சியாமளா(கனடா) ஆகியோரின் மாமியாரும், சுமன், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் நிலநடுக்கம்

  • Jan 31, 2026 - 05:29 PM
  • 0 Comments

முல்லைத்தீவு கடலோரத்தில் ரிச்ட்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது முல்லைத்தீவு கடலோரத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜியாலஜிக்கல் ஆய்வு மற்றும் சுரங்க ஆய்வு பிரிவின்(Geological Survey and Mines Bureau) தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் ரிச்சர் அளவுகோலில் 3.5 ஆக இருந்தது. பிரிவின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் மூலம் இந்த அதிர்வு கண்டறியப்பட்டது. சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

போன் பாவிப்பதை தடுத்த தந்தை கடுப்பான மகள், போட்டுத்தள்ளினார் தந்தை. சம்பவம் காலியில்

  • Jan 31, 2026 - 04:15 PM
  • 0 Comments

கையடக்கத் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி ஒருவர் தந்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் காலி மாவட்டத்தின் உரகஸ்மன்–ஹந்திய, தெல்கட பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தை மற்றும் மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாக மாறிய நிலையில், சந்தேக நபர் கூரிய ஆயுதம் ஒன்றால் சிறுமியை தாக்கியதாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடுமையாக காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வைத்தியர்கள் கடும் நடவடிக்கை மருத்துவ சேவையில் அதிர்ச்சி மாற்றம்

  • Jan 31, 2026 - 03:20 PM
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை நாளை மறுதினம் முதல் மேலும் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 26ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர அவகாசம் வழங்கியிருந்தது. எனினும், அந்த காலக்கெடு முடிந்த பின்னரும் உரிய மற்றும் திருப்திகரமான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆசிரியர் சேவை கோரும் உண்ணாவிரதிகளை சஜித் சந்தித்தார்.

  • Jan 31, 2026 - 03:02 PM
  • 0 Comments

ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை,சந்தித்தார். கடந்த 26ஆம் திகதி முதல் அவர்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்து தொடர்கின்றனர். தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். தொடர்ந்து நடைபெற்று வரும் உணவு தவிர்ப்பினால் சில போராட்டக்காரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, உடல்நிலை மோசமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

IMF கண்காணிப்பு, அநுர அரசின் கடினநிலை

  • Jan 31, 2026 - 02:38 PM
  • 0 Comments

பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை உறுதி செய்வதில் அரசு கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான நிதி கட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், அரசின் செலவுகள் பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் கடினமாகப் பெற்ற நிதிச்சீர்திருத்த முன்னேற்றங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பேரிடர் மீட்பு செலவுகள் வெளிப்படையாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச நாணய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2025 ல் இலங்கைக்கு வருவாயில் சாதனை- மத்திய வங்கி அறிவிப்பு

  • Jan 31, 2026 - 12:31 PM
  • 0 Comments

இலங்கையின் நடப்பு கணக்கு 2025 ஆம் ஆண்டில்; 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இடைக்கால மேலதிகத்தைக் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 டிசம்பர் மாதத்திலும் சிறிய அளவிலான மேலதிகம் பதிவாகியதுடன், கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களிலும் மாதாந்திர மேலதிக நிலை காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்றுமதி வருவாய் வரலாற்றிலேயே உயர்ந்த அளவை எட்டியிருந்தபோதிலும், பொருட்கள் வணிக பற்றாக்குறை அதிகரித்து 2025 ஆம் ஆண்டுக்கான மொத்தம் சுமார்; 7.9 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் பதவி யாருக்கு? இன்று தீர்மானம்

  • Jan 31, 2026 - 12:12 PM
  • 0 Comments

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை இன்று நடைபெறவுள்ள அரசியலமைப்பு சபையின் கூட்டத்தில் பரிசீலிக்கப்படலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேராசிரியர் வசந்த சேனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து உறுதிப்படுத்திய உறுப்பினர்களாக கலந்து கொண்டனர். மேலும் சில உறுப்பினர்கள் சூம் தொழில்நுட்பம் வழியாக இணைந்தனர். வெற்றிடமாகவுள்ள உள்ள கணக்காய்வாளர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசுக்கு கொடுத்த காலக்கெடு கடந்தது – GMOA கூடுகிறது

  • Jan 31, 2026 - 11:59 AM
  • 0 Comments

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கமானது அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க இன்று விசேட நிர்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சாமில் விஜேசிங்க ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசுக்கு வழங்கப்பட்ட 48 மணி நேர அவகாசம் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சுதந்திர தின ஒத்திகையால் கொழும்பில் வீதி போக்குவத்தில் மாற்றம்

  • Jan 31, 2026 - 11:42 AM
  • 0 Comments

78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளையொட்டி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரின் ஒத்திகைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பல முக்கிய வீதிகளில் காலை 7.45 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp