உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

போன் பாவிப்பதை தடுத்த தந்தை கடுப்பான மகள், போட்டுத்தள்ளினார் தந்தை. சம்பவம் காலியில்

கையடக்கத் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 14 வயது சிறுமி ஒருவர் தந்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் காலி மாவட்டத்தின் உரகஸ்மன்–ஹந்திய, தெல்கட பகுதியில் இடம்பெற்றுள்ளது. தந்தை மற்றும் மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாக மாறிய நிலையில், சந்தேக நபர் கூரிய ஆயுதம் ஒன்றால் சிறுமியை தாக்கியதாக ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடுமையாக காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்