செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேர்தல் கனவு காண்பதை விடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்..!

  • Feb 13, 2026 - 10:55 AM
  • 0 Comments

ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவது நகைப்புக்குரியது. மக்களால் பலமான ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசை யாராலும் அவ்வளவு எளிதாக அசைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தற்போதைய நிலையில் அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. எனினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

13 சாதாரண குற்றங்கள் பயங்கரவாதமாகியுள்ளது..!

  • Feb 13, 2026 - 10:48 AM
  • 0 Comments

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும். சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொரளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு மாற்றீடாக நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு மிகவும் மோசமானது.இந்த வரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பால் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண சாவடைந்தார்..!

  • Feb 13, 2026 - 10:10 AM
  • 0 Comments

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சாவடைந்தார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13.02.2026) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள் செய்திகள் புதியவை

ADB தொடர்ந்தும் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவும்..!

  • Feb 13, 2026 - 10:06 AM
  • 0 Comments

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் (Shannon Cowlin) தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கவ்லின், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். பல ஆண்டுகளாகக் கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில், இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

  • Feb 13, 2026 - 09:55 AM
  • 0 Comments

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13.02.2026) காலை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள இருப்பவர்களுக்கு அவசர அறிவித்தல்..!

  • Feb 13, 2026 - 09:51 AM
  • 0 Comments

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13.02.2026) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை நேற்று விடுத்தது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர். சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16.02.2026) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

PSDG வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கிவைப்பு..!

  • Feb 12, 2026 - 06:16 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு PSDG வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் இஸ்லாமிய சமூக கலாசார மரபு அமைப்பிற்கான கலாசார ஆடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை(12.02.2026) இறக்காமம் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் என். எப். அய்மா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக கணக்காளர் எம். ஆர். நசீமுல் ஹக், கலாசார உத்தியோகத்தர் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

சதொச வழக்கு மாட்டப்போவது இவர்தானா..?

  • Feb 12, 2026 - 06:07 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது. அவர் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு மேல் நீதிமன்ற […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

குமாரபுரத்தில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களது நினைவேந்தல்..!

  • Feb 12, 2026 - 11:27 AM
  • 0 Comments

1996ஆம் ஆண்டு, திருகோணமலை (Trincomalee) குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 30 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்ப […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்..!

  • Feb 12, 2026 - 11:17 AM
  • 0 Comments

2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால், அவரை பதவி நீக்கம் செய்த விடயத்தை சபாநாயருக்கு எழுத்து மூலம் அறிவித்தது முறையானதா என்ற கேள்வி சட்டவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கையை கடைசியாகக் கட்டியாண்ட பிரித்தானியர்கள், இந்தத் தீவின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு தந்திரமாக சுதந்திரத்தை வழங்கிச் சென்ற எழுபத்தெட்டாவது ஆண்டு கடந்த நான்காம் திகதி. இந்த நாள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp