செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள இருப்பவர்களுக்கு அவசர அறிவித்தல்..!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13.02.2026) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த அவசர அறிவிப்பை நேற்று விடுத்தது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளனர்.

சாதாரண சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16.02.2026) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வருகை தந்த விண்ணப்பதாரர்களுக்கு, திங்கட்கிழமை சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்