உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது..!

  • Apr 2, 2026 - 02:14 PM
  • 0 Comments

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார். வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வறட்சியான இந்தக் காலப்பகுதியில் வெப்பத் தாக்கத்தை தவிர்க்க போதியளவு நீரை அருந்துங்கள்..!

  • Apr 2, 2026 - 01:56 PM
  • 0 Comments

பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் இரணைமாதாநகர் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தமர்விலேயே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது வறட்சியானதும்- அதிக வெப்பமானதுமான காலநிலை நிலவுவதோடு இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் வெப்பத்தாக்கம்(Heat Stroke) ஏற்படுவதைத் தடுக்க சுத்தமான நீரை போதியளவு அருந்த வேண்டும். வெப்பத்தாக்கம்(Heat stroke) ஏற்படுவதற்கான அறிகுறிகளாக தீவிர தலைவலி, மயக்கம், வாந்தி, […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்..!ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்..!

  • Apr 2, 2026 - 01:50 PM
  • 0 Comments

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபரான கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வெற்றிலை உண்ணும் பழக்கம் நீண்டகாலம் இருப்பவர்களுக்கு புற்று நோய்க்கு வாய்ப்பு..!

  • Apr 2, 2026 - 01:44 PM
  • 0 Comments

வெற்றிலை உண்ணும் பழக்கம் நீண்டகாலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புற்றுநோய் மட்டுமன்றி வேறு பல புற்றுநோய்களும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி அண்மையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையின் பல்வைத்திய நிபுணர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் இணைந்து பூநகரிப் பிரதேச சபையினரின் ஒழுங்குபடுத்தலில் பூநகரி சந்தைப்பகுதியில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கான கருத்தமர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது..!

  • Apr 2, 2026 - 01:39 PM
  • 0 Comments

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

70 அடி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்..!

  • Apr 2, 2026 - 01:33 PM
  • 0 Comments

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (02.04.2026) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக லலித் தெரிவித்தார். நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் மண்சரிவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருமலையில் ஆன்மீகத் தலைவர்களை சந்தித்த சிறீதரன் MP…..!

  • Apr 2, 2026 - 01:25 PM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், நேற்றைய தினம்(01.04.2026) திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் (Rt. Rev. Dr. Christian Noel Emmanuel) ஆண்டகை மற்றும் தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆகியோரைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர். ​திருகோணமலை மறைமாவட்ட ஆயர் இல்லம் மற்றும் கன்னியா, […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மாணவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது..!

  • Apr 2, 2026 - 01:14 PM
  • 0 Comments

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் சுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு..!

  • Apr 2, 2026 - 12:41 PM
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்றிரவு(01.04.2026) நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குமுதினி கோபாலகிருஷ்ணன் இடம் பிடித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் ரிம் அண்ட் சென்னை டஃபி (Tim and Cindy Duffy) நிகழ்த்திய 527 மெழுகுவர்த்தி தாங்கிகள் சேகரிப்பு என்ற சாதனையையும் இதன் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்த விஜேசேகர காலமானார்..!

  • Apr 2, 2026 - 12:15 PM
  • 0 Comments

தென்னிலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02.04.2026) காலை காலமானார். காலமான போது அவருக்கு வயது 83 ஆகும். மாத்தறை, கொடபிட்டியவில் எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹிந்த விஜேசேகர, முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார். 2008 ஆம் ஆண்டில் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2001-2004 காலப்பகுதியில் மீன்பிடி மற்றும் நீரியல் வள […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp