செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்..!

  • Feb 19, 2026 - 02:53 PM
  • 0 Comments

இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். அடையாளம் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கோப்பாய் கொலை மூன்றாவது சந்தேக நபரும் கைது..!

  • Feb 19, 2026 - 02:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி..!

  • Feb 19, 2026 - 10:44 AM
  • 0 Comments

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்(19.02.2026) வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மஹிந்தவின் புத்தாவுக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 2 ஆம் திகதி விசாரணைக்கு..!

  • Feb 19, 2026 - 10:33 AM
  • 0 Comments

க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19.02.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது..!

  • Feb 19, 2026 - 10:15 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா..!

  • Feb 19, 2026 - 10:12 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். நேற்று (18.02.2026) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய முடியும் எனக் கூறினார். “அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த நவீன வசதிகள்..!

  • Feb 19, 2026 - 10:10 AM
  • 0 Comments

556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சில் வைத்து, குறித்த உபகரணத் தொகுதியை அமைச்சர், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அடையாள ரீதியாகக் கையளித்ததாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சமீபத்திய வரலாற்றில் பொலிஸாருக்காக அதிகூடிய நிதியைச் செலவிட்டு வழங்கப்பட்ட உபகரணத் தொகுதி இதுவெனக் குறிப்பிடப்படுகிறது. அதற்கமைய பின்வரும் உபகரணங்கள் […]

இந்தியா செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

புதுடெல்லியில் பாரத் மண்டபத்தில் ஜனாதிபதிக்கு விருந்து..!

  • Feb 19, 2026 - 09:52 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (18.02.2026) இரவு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “AI Impact Summit 2026” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வழங்கப்பட்ட விசேட இரவு விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Feb 19, 2026 - 09:49 AM
  • 0 Comments

இன்றைய தினம் (19.02.2026) மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக ஊவா மாகாணத்திலும் மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 […]

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அம்பாறை உடும்பன்குளம் படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

  • Feb 19, 2026 - 09:46 AM
  • 0 Comments

19-02-1986 அன்று இன்றைய நாளில் அம்பாறை உடும்பன் குளப்பகுதியில் 120 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த 40ஆவது மறக்க முடியாத நினைவு நாள் இலங்கை தமிழர்கள் வரலாற்றில் கிழக்குமாகாணத்திலும் சிறீலங்கா இராணுவத்தினால் கொடூரமான முறையில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன. இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை பெண்களை வெட்டியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். இந்த வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp