செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி..!

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம்(19.02.2026) வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்