செய்திகள்

பெய்ரூட்டில் 12 ஆயிரத்து 600 கோடியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது

  • Oct 22, 2024 - 10:39 PM
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னர் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி வரும் நிதி மூலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் நிதியை பதுக்கி வைத்திருந்த ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த பதுங்கு குழியில் பணம், தங்கம் என மொத்தமாக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு நிதி இருப்பதாக […]

உலகம்

ரஸ்சிய ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் சந்தித்து கலந்துரையாடினர்

  • Oct 22, 2024 - 10:26 PM
  • 0 Comments

பிரேசில், ரஸ்சியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பாகும் கடந்த 2009-ம் ஆண்டில் உருவான அமைப்பாகும். இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஸ்சியாவில் அமைந்துள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரஸ்சியாவின் […]

செய்திகள்

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் அடம் பிடிக்கின்றார் கோட்டாபாய இராஜபக்ஸ

  • Oct 22, 2024 - 10:02 PM
  • 0 Comments

லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கிற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து மன்றின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலேயே இவ்வாறு […]

செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி

  • Oct 22, 2024 - 09:43 PM
  • 0 Comments

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை பெறுமதியானது இன்று 288.65 ரூபாவாகவும், விற்பனை விலை பெறுமதியானது 297.65 ரூபாவாகவும் உள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதியானது விலை 288.61 ரூபாவாகவும், விற்பனை பெறுமதியானது 297.60 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது. சில வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது

செய்திகள்

அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஜனாதிபதி அநுர

  • Oct 22, 2024 - 09:33 PM
  • 0 Comments

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடினாhர் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறும் அடிப்படையில் நீண்டகால திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதால் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல என அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் அரிசியை […]

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

விளையாட்டு

சாதனை வீரன் புசாந்தனை சந்தித்து வாழ்த்தினார் அங்கஜன் இராமநாதன்….!

  • Oct 22, 2024 - 09:04 PM
  • 0 Comments

அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பழுதூக்கல் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்த சாதனை வீரன் புசாந்தன். ;யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தனின் இல்லத்துக்கு சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்pனரும்; யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இன்று நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் […]

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • Oct 22, 2024 - 05:16 PM
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள்

அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் உரிமையென்ற அங்கஜனின் மகுடத்தை அள்ளினார் எமில்காந்தன் .

  • Oct 22, 2024 - 04:10 PM
  • 0 Comments

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற இளையோர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்/ அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்பதாக தெரிவித்த எமில்காந்தன தமிழ் இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தம்மால் […]

செய்திகள்

ஓய்வுபெற்ற நீதியரசர் அல்விஸின் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

  • Oct 22, 2024 - 03:57 PM
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அருட்தந்தை சிறில் காமினி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொரளையிலுள்ள அமைந்துள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே சிறில் காமினி இவ்வாறு தெரிவித்தார். ‘கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸை இந்தக் குழுவின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp