உலகம்

ரஸ்சிய ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் சந்தித்து கலந்துரையாடினர்

பிரேசில், ரஸ்சியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய அமைப்பு பிரிக்ஸ் கூட்டமைப்பாகும்

கடந்த 2009-ம் ஆண்டில் உருவான அமைப்பாகும்.
இதில் 2010-ல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது.

கடந்த ஜனவரி 2024-ல் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, 16-வது பிரிக்ஸ் மாநாடு ரஸ்சியாவில் அமைந்துள்ள காசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி ரஸ்சியாவின் காசான் நகர் சென்றடைந்தார்.

அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி ரஸசிய ஜனாதிபதி விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தார்.

இருவரும் கைகுலுக்கி, ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

 

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்