உலகம்

ரொறன்ரோவில் தீ விபத்து குழந்தை பலி.

  • Oct 26, 2024 - 01:33 PM
  • 0 Comments

  கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் சிசுவொன்று கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் எக்லின்டன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதால் இ சிசுவொன்று உயிரிழந்த அதே வேளை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். காயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ விபத்து ஏற்படும் போது ஆறு பேர் வீடடில் இருந்தனர் எனவும், தீ விபத்து காரணமாக சிலர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள்

பொதுதேர்தல் நடைபெறும் திகதி சட்டவிரோதமானது? திகதிமாற்றம் சாத்தியமா?

  • Oct 26, 2024 - 12:44 PM
  • 0 Comments

பொதுதேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தல் நடத்தப்பட நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 5 கிழமைக்கு குறையாமலும் ஏழு கிழமைக்கு மேற்படாமலும் தேர்தல் தினம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சட்டத்தில் உள்ளதாக சட்ட நிபுணர்கள் சுட்டிக்க்காட்டியுள்ளனர். அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி தொடக்கம் 5 கிழமை கால அவகாசம் நவம்பர் 15ஆம் […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை விநியோக ஆரம்பம்.

  • Oct 26, 2024 - 12:33 PM
  • 0 Comments

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 நடைப்பெறவுள்ள. வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இம்முறை அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களுமாக மொத்தம் அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர் அட்டைகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை […]

செய்திகள்

சிறைக்கு சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த.

  • Oct 26, 2024 - 12:15 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். கொழும்பில் தனியார் ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கார் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை எனற வழக்கு தொடர்பிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் […]

செய்திகள்

அரரவானி நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

  • Oct 26, 2024 - 11:59 AM
  • 0 Comments

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை என வரலாறு படைத்துள்ளார். பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

செய்திகள்

தமிழக மீனவர்கள் 16 பேரும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

  • Oct 26, 2024 - 11:45 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோமாக மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 16 தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. கைதான மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை (24) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி; முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு உத்தரவுட்டுள்ளார்.

விளையாட்டு

தங்க மங்கை சாவகச்சேரி இந்து கல்லூரி அபிஷாலினி வென்றார் தங்கம்.

  • Oct 25, 2024 - 02:16 PM
  • 0 Comments

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டியில் வட மாகாணத்திற்கு 4ஆவது தங்கப் பதக்கத்தை சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி வென்றெடுத்தார். 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து அபிஷாலின தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 3.01 மீற்றர் உயரம் பாய்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

இஸ்ரேல் இணங்கினால் போர் நிறுத்தத்திற்கு தயாரென ஹமாஸ் அறிவித்துள்ளது.

  • Oct 25, 2024 - 01:08 PM
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டை கடந்தும் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரையான காலப்பகுதியில் குழந்தைகள், பெண்கள் அடங்கலாக 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் உள்ளனர். நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. எனவே ஹிஸ்புல்லா இயக்கம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அந்த இயக்கத்தின் […]

செய்திகள்

யாழில் கணவன் உயிரிழந்ததையடுத்து மனைவி தற்கொலை முயற்சி.

  • Oct 25, 2024 - 12:40 PM
  • 0 Comments

திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (24) சுகயீனம் அடைந்திருந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சிவனேஸ்வரன் சிறிராஜ் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கணவனின் பிரிவை தாங்க முடியாத மனைவி பெருமளவு மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சினிமா

கரங்களை விரித்தும் இதயத்தை திறந்தும் வைத்து காத்திருக்கின்றேன்- விஜய் கடிதம்.

  • Oct 25, 2024 - 11:29 AM
  • 0 Comments

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp