செய்திகள்

சிறைக்கு சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பில் தனியார் ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கார் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை எனற வழக்கு தொடர்பிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்