செய்திகள்

அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களை தாக்குவதற்கு அரபு நாடு நிதி உதவி

  • Oct 27, 2024 - 10:22 AM
  • 0 Comments

வெளிநாடொன்றின் ஆதரவுடன் அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள் ,இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துள்ளனர். அரபு நாடு இந்த தாக்குதலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி வழங்கியது என விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது கொலைவெறி தாக்குதல்

  • Oct 27, 2024 - 07:39 AM
  • 0 Comments

இன்று கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கரந்தன் பிரதேசத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் நேற்று (26) மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் அபோது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களும் தற்காப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர் இதனையடுத்து திரும்பிச் சென்ற நால்வர் கொண்ட குழு […]

செய்திகள்

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  • Oct 26, 2024 - 05:01 PM
  • 0 Comments

.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்திகள்

மணியின் மான் யாழ் நகரில்; வாக்கு வேட்டை.

  • Oct 26, 2024 - 04:45 PM
  • 0 Comments

  தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (26) யாழ் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. யாழ் நகர் பகுதியில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கும் நோக்கில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் வாக்களிக்குமாறு கேட்டனர். தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மிதிலைச்செல்வி பத்மநாதன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விக்னேஸ்வரன் […]

செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

  • Oct 26, 2024 - 04:06 PM
  • 0 Comments

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதியுமான டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைப்பெற்று வந்தது நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியால் ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஜேமி ஸ்மித் 89 ஓட்டங்களும் டக்கெட் 52 ஓட்டங்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் […]

செய்திகள்

மெக்டொனால்ட்ஸ் வர்த்தக நிறுவனத்திற்கு மூடுவிழா.

  • Oct 26, 2024 - 03:49 PM
  • 0 Comments

மெக்டொனால்ட்ஸ் குழுமம் இலங்கையிலுள்ள கிளைகளுடன் சர்வதேச உணவக அமைப்புகள் நிறுவனம் தங்களது வர்த்தக உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இதுவரை ஆதரவு அளித்த பொதுமக்களுக்கு நன்றியை மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது. மெக்டொனால்ட்ஸ் கிளைகளை இலங்கையில் மூடுவதற்கான காரணங்களை மெக்டொனால்ட்ஸ் அறிவிக்கவில்லை.

செய்திகள்

இரத்த வாந்தி எடுத்தவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

  • Oct 26, 2024 - 03:37 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார். இறந்தவருகச்கு சில ஆண்டுகளுக்கு முன் மின்சாரம் தாக்கிய பின் இடையியைடே வாந்தி ஏற்படுவது வழமையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதியும் காலை இரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து ; மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்டு […]

செய்திகள்

காமக்கடிதம் எழுதிய அதிபர் பதிலளித்த பாடசாலை மாணவி.

  • Oct 26, 2024 - 03:24 PM
  • 0 Comments

ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் அவரு பாடசாலையில் 10 ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதியுள்ளார். அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதிபருக்கு மாணவி கடிதம் எழுதியுள்ளார். 2 கடிதங்களும் தற்போது வெளிப்பட்டுள்ளது. குறித்த மாணவியை அதிபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கலாமென பிரதேசவாழ்; மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 2 கடிதங்களும் வெளியானதையடுத்து அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் […]

உலகம் செய்திகள்

ஈரான் மீதான இன்று காலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

  • Oct 26, 2024 - 01:54 PM
  • 0 Comments

ஈரான் மீது இன்று காலை தாக்குதல் தொடுத்த இஸ்ரேல் இராணுவம், தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். ‘இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதில் நடத்தி முடித்து விட்டதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதாகவும் இதன் மூலம், இஸ்ரேல் மக்களுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது […]

உலகம் செய்திகள்

கனடா ஒன்றாரியோவில் மருத்துவ கற்கைகளுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதியில்லை.

  • Oct 26, 2024 - 01:36 PM
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பினை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026ம் ஆண்டிலிருந்து ஒன்றாரியோ மாகாணத்தில் மருத்துவ கற்கைகளுக்காக வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவித்துள்ளது. 95 வீதமான அனுமதியினை ; ஒன்றாரியோ மாகாண மாணவர்களுக்கும் எஞ்சிய 5 வீதத்தினை கனடாவின் ஏனைய மாகாண மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பநல மருத்துவர்களாக சேவையாற்ற உத்தரவாதம் கொடுக்கும் மாணவர்களுக்கு ஒன்றாரியோ அரசாங்கம் அதிக சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. முதலவர் டக் ஃபோர்ட் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp