செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுங்க அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு கறுப்புப்பட்டியுடன்…!

  • Feb 24, 2026 - 12:52 PM
  • 0 Comments

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (24.02.2026) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும், இப்பிரச்சினை தொடர்பில் வரும் 26ஆம் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

1447 வருட இப்தார் திட்டம் அங்குரார்ப்பணம்..!

  • Feb 24, 2026 - 12:47 PM
  • 0 Comments

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (23.02.2026) திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் முனீர் முலப்பர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி உட்பட பல உலமாக்கள், பல்கலைக்கழக மற்றும் அரபுக் கல்லூரி விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பல ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்.!

  • Feb 24, 2026 - 09:37 AM
  • 0 Comments

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். “தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வீடமைப்பு நிர்மாணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ”இந்த வருடம் 2026 திட்டத்தின் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து..!

  • Feb 24, 2026 - 09:34 AM
  • 0 Comments

ஒருவர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம் ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24.02.2026) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து திடீரென கவனக்குறைவாக வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றை மோதாமல் தவிர்க்க முயன்ற பேருந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது..!

  • Feb 24, 2026 - 09:30 AM
  • 0 Comments

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தின் பின்னர் அவர் வெளிநாடு சென்றிருந்ததுடன், நேற்று (23.02.2026) மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு..!

  • Feb 24, 2026 - 09:27 AM
  • 0 Comments

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான […]

முக்கிய செய்திகள் உலகம் உள்ளூர் புதியவை

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் நிராகரிப்பு; நாமல் ராஜபக்க்ஷ கொடுத்த பதில்..!

  • Feb 23, 2026 - 01:48 PM
  • 0 Comments

பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் மூலம் […]

முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு..!

  • Feb 23, 2026 - 01:46 PM
  • 0 Comments

மன்னார், தாராபுரம் ஹுஸைனியா பள்ளிவாயலில் புதிய ஹிப்ழ் (மனன பிரிவு) மத்ரஸா அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) ஆரம்பித்து வைத்தார். மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, “இக்ராஹ் – ஓதுவீராக” என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் […]

முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை சேர் பேடன்பவலின் ஜனன தினம்..!

  • Feb 23, 2026 - 12:17 PM
  • 0 Comments

மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை சேர் பேடன்பவலின் 169வது ஜனன தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க தலைவர் ஏ.நிசாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் கிளை தலைவருமான ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். உலகளாவிய ரீதியில் சேர் பேடன்பவலின் பிறந்த தினத்தை முன்னிட்டு சாரணியர்களினால் பல நிகழ்வு இடம் பெற்று வருகின்றன. நாடளாவிய ரீதியில் பல விசேட நிகழ்வுகள் (22.02.2026) இடம் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற இரத்ததானமுகாம்..!

  • Feb 23, 2026 - 12:10 PM
  • 0 Comments

சாவகச்சேரி முன்னாள் உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஞாபகர்த்தமாக இன்றைய தினம் (23.02.2026)தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இரத்ததான முகாம் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்த தான நிகழ்வானது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp