செய்திகள்

பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு நாளை ஆஜராக வேண்டும்

  • Nov 19, 2024 - 09:42 PM
  • 0 Comments

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு சிஐடியினர் உத்தரவிட்டுள்ளனர். சனல் 4 இன் காணொளியில் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் வெளியிட்ட பெயரில் பிள்ளையானின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காகவே சிஐடியினர் அவரை அழைப்பு விடுத்துள்ளனர்

உள்ளூர்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை போராடவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

  • Nov 19, 2024 - 09:32 PM
  • 0 Comments

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நிறுத்துவதற்கான அழுத்தங்களையும இயலுமான வழிகளில் எல்லாம் போராடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய பொறிமுறைகள் உள்ள அனைத்து அரங்குகளில் அநுர தலைமையிலான அரச இயந்திரத்தை நிறுத்தக்கூடிய சாத்தியமான வழிகளில் எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார் இன்று (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர்தூவி […]

செய்திகள்

முக்கோண காதல் இருவர் பலி ஒருவர் காயம்

  • Nov 19, 2024 - 12:38 PM
  • 0 Comments

பெண் ஒருவரை கொலை செய்து விட்டு மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனுராதபுரம் மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது 35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட காம உறவின் காரணமாகவே இந்தக் கொலையும் தற்கொலையும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் காயமடைந்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்திகள்

பிரபாகரன் வேண்டாமென வடக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்- விமல்வீரவன்ச

  • Nov 19, 2024 - 12:02 PM
  • 0 Comments

கனேடிய தமிழ் காங்கிரஸ் தான் பிரிவினைவாதத்தை நாடி நிற்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அதே வேளை புலம் பெயர் தமிழர்கள் தான் பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என கடந்த 14 ம் திகதியில் இருந்து அவர் தண்ணீர் கூட குடிக்காமல் கவலையில் மூழ்கியுள்ளார் வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை எனவும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு பதிலாக ஜேவிபியை […]

செய்திகள்

பெரும் போகத்திற்ககான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது

  • Nov 19, 2024 - 11:47 AM
  • 0 Comments

விவசாயிகளுக்கு கால போகத்திற்கான உர மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பயிர்செய்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை பொறுத்து விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்  

உள்ளூர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்த்தர் மரணம்

  • Nov 19, 2024 - 09:16 AM
  • 0 Comments

வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

இன்று ஜேவிபி அரசின் முதலாவது அமைச்சரவை கூடுகின்றது

  • Nov 19, 2024 - 08:04 AM
  • 0 Comments

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடுகின்றது 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவியேற்றுக்கொண்டர். பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ள உள்ளனர். பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

உள்ளூர்

கிளிநொச்சி இரணைமடுக்குள மீள் கட்டுமான வேலையில் ஊழல்-விசாயிகள் கவலை

  • Nov 18, 2024 - 08:59 PM
  • 0 Comments

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் கட்டாத காரணத்தால் இன்று இடிந்து வீழ்ந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படவில்லையென விவசாயிகள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் தற்போது அது இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் […]

செய்திகள்

ஊழலுக்கு எதிராக அரசு போராடும் என சர்வதேச நாணயநிதியதிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

  • Nov 18, 2024 - 08:39 PM
  • 0 Comments

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கவனத்திலெடுக்கும் மனநிலையினை சர்வதேச நாணயநிதியம் பின்பற்றவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுமக்கள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உழைக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச நாணயநிதியம் அதற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். தனது தலைமைத்துவத்தின் கீழ் செலவீனங்களிற்காக ஒதுக்கீடுகள் பயனுள்ள விதத்தில் செலவிடப்படும் என உறுதியளித்த அவர் சிறுவர் வறுமை,போசாக்கின்மை போன்றவற்றிற்கு […]

செய்திகள்

21 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

  • Nov 18, 2024 - 11:38 AM
  • 0 Comments

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 01. பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு 02. விஜித ஹேரத் – வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில் 03. சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் 04. ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு 05. சரோஜா சாவித்திரி போல்ராஜ்- […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp