உள்ளூர்

மழை வெள்ளம் ஏ9 வீதியை முடக்கியது

  • Nov 27, 2024 - 03:04 PM
  • 0 Comments

சீரற்ற வானிலையால் வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுகின்றது. கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர்

விலாசம் காட்டிய வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை

  • Nov 27, 2024 - 06:36 AM
  • 0 Comments

தேர்தலில் வாக்களிக்கும் இலத்திரனியல் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டிக்காக 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். மாணவன் தயாரித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை அதாவது வாக்கு சீட்டு […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழையால் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

  • Nov 27, 2024 - 06:01 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கடைசி 24 மணி நேரத்தில் 2ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது இதனை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா உறுதிப்படுத்தியுள்ளார் சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும், […]

உள்ளூர்

வவுனியாவில் அரச அலுவலகங்கள் பலதும் வெள்ளத்தில் மூழ்கியது.

  • Nov 27, 2024 - 05:39 AM
  • 0 Comments

வவுனியாவில் பெய்து வரும் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் வவுனியா காரணமாக அரச திணைக்களங்கள்; நீரில் முழ்கிய அதேவேளை மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் வவுனியாவில்; வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் எனபன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மாகவித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் நிரம்பி பாய்வதால் வீதி போக்குவரத்தை பாதுகாப்பு கருதி […]

செய்திகள் விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

  • Nov 26, 2024 - 02:17 AM
  • 0 Comments

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. பும்ராவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 104 ரன்னில் சுருண்டது. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் […]

உலகம் செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்.

  • Nov 26, 2024 - 02:10 AM
  • 0 Comments

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டுக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 200 பேர் வரை பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 117 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். திடீர் தாக்குதலால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல் கடந்த 13 மாதமாக பாலஸ்தீனிய நகரங்கள் மேல் தாக்குதல் நடத்தி 44 ஆயிரம் பேரை கொலை செய்துள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் […]

உலகம் செய்திகள்

உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது- ஐ.நா அறிக்கை.

  • Nov 26, 2024 - 02:05 AM
  • 0 Comments

இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் அவர்களது சொந்த குடும்பத்தினரோ, உறவினரோ அல்லது தெரிந்தவராகவரோ இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். இந்நிலையில் கடந்த 2023 ஆண்டில் மட்டுமே உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 40 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான […]

இந்தியா செய்திகள்

பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது- கனிமொழி கவலை.

  • Nov 26, 2024 - 01:52 AM
  • 0 Comments

சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினாட கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள். ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை […]

இந்தியா செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்.

  • Nov 26, 2024 - 01:44 AM
  • 0 Comments

அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன, இதுபற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார்.அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்று காட்டமாக பதில் அளித்தார். இந்நிலையில் இந்த பதிலுக்கு பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தொடங்கிய […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவிற்கு நீதி கிடைக்கும்- துரைராசா ரவிகரன்.

  • Nov 26, 2024 - 01:38 AM
  • 0 Comments

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசு விவகாரம் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன் மன்னார் மாவட்ட செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி இந்த விடயத்தின் நிலைதொடர்பிலும் கேட்டறிந்தார். இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு நீதியைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதன்போது வாக்குறுதி வழங்கியுள்ளார். https://pathivunews.com/ […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp