கனடா

கனேடிய பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • Jan 1, 2025 - 04:11 AM
  • 0 Comments

கனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை அனுப்பி அதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்து பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் குறியெண்ணான 470 மற்றும் 404 ஆகியனவற்றினை அடிப்படையாகக் கொண்ட எண்களிலிருந்து அழைப்பு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கோரப்படும் பணம் வழங்கப்படாவிட்டால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் என […]

இந்தியா

மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங்!

  • Jan 1, 2025 - 03:59 AM
  • 0 Comments

தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே மாதம் 3 ம் திகதி தொடக்கம் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி […]

இந்தியா

கேஜ்ரிவால் தங்க கழிப்பறையை பயன்படுத்துகிறார்- பாஜகவினர் குற்றச்சாட்டு!

  • Jan 1, 2025 - 03:53 AM
  • 0 Comments

ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் அவரது வீட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்துவதாக டெல்லி பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர். தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் கோவிட் தொற்று காலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியிருந்த போது சீஷ் மஹால் எனப்படும் தனது ஆடம்பர இல்லத்தைப் புதுப்பிக்க பல கோடி ருபாய் செலவு செய்ததாக பாஜகவினரால் முன்னர் சர்ச்சை எழுப்பப்பட்டது. இந்த நிலையில் கேஜரிவால் தனது வீட்டில் தங்க முலாம் பூசிய கழிப்பறையைப் […]

உலகம்

உக்ரைன் மீது தொடர் தாக்குதலை மேற்கொணடுள்ள ரஷியா!

  • Jan 1, 2025 - 03:45 AM
  • 0 Comments

ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட பல்வேறு இடங்களை ரஷியா நேற்று காலை முதல் தாக்கிவருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் நீண்டு கொண்டே இருக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவம், அதற்கு உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்துவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் உக்ரைன் டிரோன்கள் ரஷியாவை தாக்கியது. இதனால் வான் பாதுகாப்பு முறை; மூலம் டிரோன் தாக்குதலை முறியடித்தது. அப்போதுதான் தவறுதலாக அஜர் பைஜான் ஏர்லைன்ஸ்க்கு […]

உலகம்

டிரம்புக்கு 120 கோடி அபராதம் : பெடரல் நீதிமன்றம் உத்தரவு!

  • Jan 1, 2025 - 03:32 AM
  • 0 Comments

அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் (ஜனவரி) மாதம் 20-ந்தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் முறைப்பாடு […]

விளையாட்டு

பிரிஸ்பேன் ஓபின் டென்னிஸ்: சபலென்கா 2வது சுற்றுக்கு தகுதி!

  • Jan 1, 2025 - 03:24 AM
  • 0 Comments

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான போட்டியில் சபலென்கா 2வது சுற்றுக்கு முன்னேறினார் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, மெக்சிகோவின் ஜெனாடா சராசுவா உடன் மோதினார். இதில் சபலென்கா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நாளை (02.01.2025) நடைபெறும் அடுத்த சுற்றில் சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை சந்திக்கிறார். இதையும் […]

விளையாட்டு

Brisbane Open Tennis:அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!

  • Jan 1, 2025 - 03:18 AM
  • 0 Comments

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகிடா உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். நாளை (02.01.2025) நடைபெறும் அடுத்த சுற்றில் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் […]

உள்ளூர் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு!

  • Jan 1, 2025 - 03:07 AM
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31.12.2024) யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட டெங்கு நோய் தாக்கம் நவம்பர் மாதம் முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது . நவம்பர் மாதத்திலே 134 […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு கடற்தொழில் இணையமும்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சந்திப்பு

  • Jan 1, 2025 - 03:03 AM
  • 0 Comments

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று(31.12.2024) காலை யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது. இதன் பொழுது கடற்றொழில் அமைச்சினால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தினை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலமைகளுடன் வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதனை வலியுறுத்தல் , தேசிய மக்கள் சக்தியினால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல், 2025 வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள் , ஜனாதிபதி அனுர […]

உள்ளூர் செய்திகள்

நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல – இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்!

  • Jan 1, 2025 - 02:36 AM
  • 0 Comments

சமஸ்டி பிரிவினையல்ல. அது பிரிவினைக்கிட்டுச் செல்லும் தீர்வும் அல்ல. நாங்கள் பிரிவினைவாதிகளும் அல்ல. இடதுசாரி கொள்கையில் இருந்து ஜனாதிபதியாக தெரிவான அநுர குமார திசாநாயக்க இதனை புரிந்து புத்தாண்டில் செயற்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் தெரிவித்தார். யாழில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார். சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் ஏற்கனவே இருப்பவர்களுக்கு மட்டும்தான் கட்சி வாய்ப்பு அளிக்கும் என்ற கருத்து இருப்பதால் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp