செய்திகள்

கிளிநொச்சியில் 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

  • Jan 2, 2025 - 02:08 PM
  • 0 Comments

கிளிநொச்சி , பளை – தம்பகாமம் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 45 வயதுடைய பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேக நபர்களிடமிருந்து 23 கிலோ 165 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் […]

செய்திகள்

கிளிநொச்சியில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டது !

  • Jan 2, 2025 - 01:55 PM
  • 0 Comments

பரந்தன் – புதுக்குடியிருப்பு ஏ – 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியிலேயே இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஏ – 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் கட்டுமானம் இடம்பெற்றுவரும் பாலத்திலேயே இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சினிமா

ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை இம் மாதம் வெளியீடு

  • Jan 2, 2025 - 06:43 AM
  • 0 Comments

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை. ஜெயம் ரவி, நித்யா மெனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது, டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

உள்ளூர் செய்திகள்

இனப்பிரச்சினையைத் தீர்க்க க்ளீன் சிந்தனை வேண்டும் -ஸ்ரீதரன்!

  • Jan 2, 2025 - 02:01 AM
  • 0 Comments

இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(01) அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். மலர்ந்திருக்கும் புதுவருடம் இன ஒற்றுமையுடன் கூடிய இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கும் அவர்களின் இலக்கை அடையும் புதுவருடமாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு காலடி எடுத்து வைக்கின்றோம். இலங்கை நாட்டில் வருமானம் தரக்கூடிய பொருளாதாரம் எவையும் இல்லை பொருந்தோட்ட பொருளாதாரமும் இல்லை சுற்றுலாப்பயணிகளின் வருகையை மட்டும் […]

உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

  • Jan 2, 2025 - 01:49 AM
  • 0 Comments

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில், விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. […]

உலகம் செய்திகள் வினோத உலகம்

2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த விமானம்!

  • Jan 2, 2025 - 01:38 AM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய செய்தி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2025-ம் ஆண்டு தொடங்கிய பிறகு, ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கேத்தே பசிபிக் விமானம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை அடைந்தபோது புத்தாண்டு பிறக்கவில்லை. அதன்படி, இந்த விமானம் எதிர்காலத்தில் இருந்து  வந்த காலப்பயணம் என்று பலரால் அழைக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் தங்களது பயணத்தின் இடையே சர்வதேச திகதிக் கோட்டை (IDL) […]

உள்ளூர் செய்திகள்

கிளி.கணேசபுரம் சனசமூக நிலையத்தின் மர நடுகையும், மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு!

  • Jan 2, 2025 - 01:25 AM
  • 0 Comments

கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், பசுமைச் சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு நேற்று(01.01.2025) நடைபெற்றது. கணேசபுரம் சனசமூக நிலைய தலைவர் Lion இராசதுரை ஜெயசுதர்சன் அவர்களின் தலைமையில், சனசமூக முன்றலில் காலை 11.00 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் கௌரவ விருந்தினர்களாக […]

கட்டுரை

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…!

  • Jan 2, 2025 - 01:16 AM
  • 0 Comments

  தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…! தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும். எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள். போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)01.01.2025

  • Jan 2, 2025 - 12:00 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ‘க்ளீன் ஶ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக எழுந்த மக்கள் புலம்பெயர் உறவுகள் எம் நாட்டைக்கட்டி எழுப்புவர்- செல்வம் எம்பி மக்களுக்கு சொன்னதை செய்யுங்கள் அநுரவுக்கு,நாமல் தெரிவிப்பு வடக்கின் வர்த்தகர்கள் 2 கோடியே 58 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தியுள்ளனர் https://youtu.be/vTUZ1ADaoy0

செய்திகள்

மக்களுக்கு சொன்னதை செய்யுங்கள் அநுரவுக்கு,நாமல் தெரிவிப்பு

  • Jan 1, 2025 - 09:56 PM
  • 0 Comments

கடந்த கால அரசாங்கங்களை விமர்சிக்காது நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அநுர அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் இராஜபக்ஸ தெரிவிததுள்ளார் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே கடந்த கால அரசாங்கங்களை விமர்வித்துக் கொண்டிருக்காமல் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முறையாக நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ராஜபக்ஷர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளை குறைப்பதால் பொருளாதார […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp