செய்திகள்

பட்டபின்னும் திருந்தாத தமிழரசுக்கட்சி, மீண்டும் தமிழ் தேசியக்கட்சிகளிடையே முறுகல்

  • Jan 23, 2025 - 06:04 AM
  • 0 Comments

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. அதனையடுத்து , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய இரண்டு கட்சிகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன. புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் […]

கனடா

ஒட்டாவாவில் நடைபெறவுள்ள தமிழ் மரபுத்திங்கள் விழா!

  • Jan 23, 2025 - 12:37 AM
  • 0 Comments

தமிழ் மரபுதிங்கள் விழா 2025 ஒட்டாவா (Ottawa) தமிழர் ஒன்றியம் வழங்கும் தமிழ் மரபுதிங்கள் விழா எதிர்வரும் 26 ம் திகதி (நாளையதினம்) ஞாயிற்றுக்கிழமை ஒட்டாவாவில் நடைபெறவுள்ளது. இடம். சென் எலிஸ் சென்றர், 750 ரிச்ட் வூட் எவனியூ, ஒட்டாவா,ஒன்றாரியோ, கனடா. வரவேற்பு மாலை 4 மணி தொடக்கம் 5.30 மணி வரை இரவு விருந்துபசாரம் 5.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஒட்டாவா (Ottawa) தமிழர் ஒன்றியம் அனைத்து தமிழ் சொந்தங்களையும் அழைத்து […]

செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரான பெண்ணொருவர் தற்கொலை!

  • Jan 22, 2025 - 08:56 PM
  • 0 Comments

நேற்றிரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் இந்தச் சம்பவம் இன்று (22) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை அநுர அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது- தீவக சிவில் சமூகம்

  • Jan 22, 2025 - 08:50 PM
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்விற்கு அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அதில் கவனம் செலுத்தாது நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் […]

சினிமா

ஜெய் நடித்துள்ள பேபி & பேபி படத்தின் ‘என்ன தவம்’ பாடல் வெளியானது

  • Jan 22, 2025 - 07:59 PM
  • 0 Comments

நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் பேபி & பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேகர், பிரத்தோஸ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி […]

உலகம்

சீனாவினதும் ரஸ்சியாவினதும் உறவுகளை வலுப்படுத்த ஜி ஜின்பிங் மற்றும் புட்டின் ஆலோசனை நடத்தியுள்ளனர்

  • Jan 22, 2025 - 07:38 PM
  • 0 Comments

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஸ்சியாவையும் கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார். 2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஸ்சிய ஜனாதிபதி புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஸ்சியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் […]

இந்தியா

நான் பிரபாகரன் பிள்ளையென்கிறார் சீமான்

  • Jan 22, 2025 - 07:08 PM
  • 0 Comments

உண்மையான கம்யூனிசம், உண்மையான முற்போக்கு, சீர்திருத்தம், சமூக நீதி, பெண் உரிமை எல்லாம் பிரபாகரன் பிள்ளைகளிடம் உள்ளது. பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியாரிஸ்டுகள் இன்று சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போரட்டம் நடத்தினர். அப்போது சீமான் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர். இந்த போராட்டம் குறித்து சீமான் கூறியதாவது:- அரசியல் அனாதை ஆகிவிடுவேன் என பல அனாதைகளை சொல்கிறது. 32 இயக்கங்கள் […]

செய்திகள்

டிஜிட்டல் டிரெண்ட அர்ச்சுனா எம்.பியின் வழக்கு ஒத்திவைப்பு

  • Jan 22, 2025 - 06:51 PM
  • 0 Comments

நீதிமன்றத்தில் சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைக்கட்டது அதே வழக்கு மீண்டும் 3ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளப்டவுள்ளது ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை ‘அர்ச்சுனா லோச்சன்’ என்று பெயரிட்டனர். ஆனால் சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என […]

செய்திகள்

சட்டவிரோத கடற்தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

  • Jan 22, 2025 - 06:25 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான நிலை உருவாகுவதால் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்படை, இராணுவம், விமானப்படை, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மூலம் இவ்வாறான தொழில்களை […]

செய்திகள்

நாமல்  நிதி மோசடி செய்தாரா? விசாரணை ஆரம்பம்

  • Jan 22, 2025 - 02:28 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஸ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று வழக்கு விசாரணைக்கு அழைத்த போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக இலஞ்சம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp