உலகம்

சீனாவினதும் ரஸ்சியாவினதும் உறவுகளை வலுப்படுத்த ஜி ஜின்பிங் மற்றும் புட்டின் ஆலோசனை நடத்தியுள்ளனர்

e0ae9ae0af80e0aea9e0aebee0aeb5e0aebfe0aea9e0aea4e0af81e0aeaee0af8d e0aeb0e0aeb8e0af8de0ae9ae0aebfe0aeafe0aebee0aeb5e0aebfe0aea9e0aea4 | Pathivu News

கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் உக்ரைன் போர் குறித்தும் ரஸ்சியாவையும் கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.

2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஸ்சிய ஜனாதிபதி புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஸ்சியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ‘அமெரிக்காவை விட 3 மடங்கு மக்கள்தொகை கொண்டுள்ள சீனா உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்காவை விட கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைவாகவே பங்களிக்கிறது’ என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே ரஸ்சியாவையும், சீனாவை டிரம்ப் விமர்சித்துள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு சீனா – ரஸ்சிய உறவுகளை பலப்படுத்தும் விதமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக ரஸ்சியய ஜனாதிபதி புதின் உடன் நேற்று உரையாற்றியுள்ளார்.

அந்த உரையாடலில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தைவான் விவகாரத்தில் சீனாவிற்கு ரஸ்சியா ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp