முக்கிய செய்திகள்

அம்பாறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலமையில் போதைப்பொருளுக்கெதிரான செயற்திட்டம் முன்னெடுப்பு..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கமைய நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(06.03.2026) அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி பங்கு பெற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’- […]

முக்கிய செய்திகள் புதியவை

எரிசக்தி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி..!

  • Mar 6, 2026 - 12:00 PM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் படி, மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் அமைப்பு இயக்கங்களுக்காக ஆறு புதிய நிறுவனங்களை நிறுவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் பல […]

முக்கிய செய்திகள் புதியவை

சம்பள ஆணைக்குழுவொன்று நிறுவப்படும்..!

  • Mar 6, 2026 - 11:54 AM
  • 0 Comments

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (06.03.2026) பாராளுமன்றில் உரையாற்றிய அவர், இந்த ஆணைக்குழு ஊடாக அரச சேவையின் சம்பள முரண்பாடுகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அதிபர் சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் குறித்து […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் குருநகர் இறங்குத்துறையில் படகு கவிழ்ந்து விபத்து..!

  • Mar 6, 2026 - 11:52 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (06.03.2026) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாலத்தீவு திருவிழாவுக்கு படகு மூலம் சென்ற யாத்திரிகர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு..!

  • Mar 6, 2026 - 11:50 AM
  • 0 Comments

பங்குனி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது மாதமாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் பின்வரும் விலைகளில் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி , 12.5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 3,690, 5 கிலோ கிராம் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில்..!

  • Mar 6, 2026 - 11:16 AM
  • 0 Comments

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் நடைபெறும். ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய விழாவைக் கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மகளிர் ற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானின் புதிய உச்சத்தலைவரை நானே தீர்மானிப்பேன்..! டிரம்ப் அறிவிப்பு

  • Mar 6, 2026 - 10:58 AM
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத்தலைவர் கமேனியை தொடர்ந்து புதிய உச்சத்தலைவரை நானே தீர்மானிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டெனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அயத்துல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் புதல்வாரன 56 வயதுடைய மொஜ்தாபா கமேனியை, புதிய உச்ச தலைவராக நியமிக்க ஈரான் தயாராகி வரும் நிலையில்; டொனல்ட் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை எனக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை பதவியிலிருந்து நீக்கினேன். தற்போது டெல்சி […]

இந்தியா உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இரு கடற்தொழிலாளர்களையும் நாட்டிற்கு அழைத்து வாருங்கள்..! உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை

  • Mar 6, 2026 - 10:52 AM
  • 0 Comments

யாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்களும் காணாமல் போன நிலையில் 6 நாட்களின் பின்னர் இந்தியாவில் கரையொதுங்கிய நிலையில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகு மற்றும் […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி..!

  • Mar 6, 2026 - 10:05 AM
  • 0 Comments

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை வழங்கியுள்ளது. அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அனுமதியில், 2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரஷ்ய கூட்டமைப்பிற்கு சொந்தமான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை […]

ஈழம் புதியவை முக்கிய செய்திகள்

மாமனிதர் கிட்டிணன் சிவநேசன் அவர்களின் வீரவணக்க நினைவு நாள்..!

  • Mar 6, 2026 - 09:52 AM
  • 0 Comments

தாய் மண்ணில் : 21-01-1957 தாயக மண்ணில் : 06-03-2008 தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று விடுத்த அறிக்கை: […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp