உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில அரசாங்கம் பொய்யுரைக்கின்றது- உதய கம்மன்பில

  • Apr 16, 2025 - 07:21 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது தொடர்பானதே இந்த குற்றச்சாட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்புகாவல் உத்தரவு எந்த வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யாரென அறிய ஆவலுடனுள்ளோம்- அருட்தந்தை சிரில் காமினி

  • Apr 16, 2025 - 05:56 PM
  • 0 Comments

தெரியவரும என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அதற்காக காத்திருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி, தெரிவித்துள்ளார் இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என கூறினார். இந் நிலையில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மாகாண சபைகளை வலுப்படுத்துமாறு தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை

  • Apr 16, 2025 - 05:45 PM
  • 0 Comments

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதை தேசிய சமாதானப் பேரவை வரவேற்றுள்ளது அத்துடன் மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதுதொடர்பில் […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியின் 3 பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

  • Apr 16, 2025 - 05:32 PM
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை மாவட்டங்களின் அஞ்சல் திணைக்களங்களிடம் கையளிக்கப்பட்டதாக அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார அறிவித்துள்ளார். வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் […]

உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ரி 56 ரக துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு

  • Apr 16, 2025 - 05:27 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தமிழர்கள் மறக்க கூடாது- பிரிட்டன் எம்.பி உமா குமரன்

  • Apr 16, 2025 - 05:17 PM
  • 0 Comments

‘மே 2009 கொடூரங்களைநாங்கள் நினைவில் கொள்கின்றோம், நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் – நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது’- பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் – நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும்; உலகெங்கிலும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு

  • Apr 15, 2025 - 08:52 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விசாரணைக்கு அழைத்துள்ளது. கிளிநொச்சி சாந்தபுரத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மனித உரிமைகள் […]

உள்ளூர் செய்திகள்

யாழ் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும் வடக்கு ஆளுநர்

  • Apr 15, 2025 - 08:44 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு […]

உள்ளூர் செய்திகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை பயன்படுத்தி நேர்வேயில் நிதி சேகரிப்பு- அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு

  • Apr 15, 2025 - 08:38 PM
  • 0 Comments

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித […]

உள்ளூர் செய்திகள்

பிள்ளையானை சந்திப்பதற்கு ரணில் கோரிய போதும் சந்திப்பிற்கு அனுமதி மறுப்பு

  • Apr 15, 2025 - 03:54 PM
  • 0 Comments

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவலில் உள்ள ‘பிள்ளையான்’ எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை அழைத்து, […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp