திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..!
தெட்ஷணகைலாசம் எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவத் திருவிழா நேற்றைய தினம் (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. கொடியேற்றம் (துவஜாரோகணம்) (22.03.2026) காலை 8.00 மணிக்கு அம்பாளின் திருவருளுடன் இடம்பெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார். இரதோற்சவம் (தேர்த்திருவிழா) 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும். 01.04.2026 அன்று உதயத்தில் தீர்த்தோற்ஸவமும், அன்று […]









