உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி..

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி நேற்று (19.03.2026) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ச.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி லலய உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் T.புஸ்பரட்னம் கலந்துகெண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் பதில் அதிபரும் யாழ். ஹட்லிக் கல்லூரி ஆசிரியருமாகிய சி.நிமலன், பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி ஆசிரியருமாகிய ச.ஜெயலலிதா, பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபரும் மு/பண்டாரவன்னியன் மகா வித்தியாலய ஆரிரியருமாகிய மா.ரதிக்குமார், மாங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த விளையாட்டுப் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டிகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்