உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

லஞ்சமாக பெற்ற பணத்தை மஹிந்தவுக்கு கொடுத்த கபில சந்திரசேன

  • Mar 20, 2026 - 11:51 AM
  • 0 Comments

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2015 ஆம் ஆண்டு முன்னாள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நேற்றைைய தினம் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவேந்தல் ஆரம்பமானது..!

  • Mar 20, 2026 - 11:44 AM
  • 0 Comments

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு நேற்றைய தினம்(19.03.2026) அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி நினைவேந்தல் மாத்தை ஆரம்பித்து வைத்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தொண்டமானாறு செல்வ சந்நிதியானுக்கும் தடுப்பு வேலிகள்..!

  • Mar 20, 2026 - 11:33 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கும் முகப்பிற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதியானை காண வரும் அடியவர்கள் இடையூறின்றி சென்று சந்நிதியானை வணங்குவதற்கும், ஆலய வளாகத்திற்குள் வாகனங்கள் உட்செல்வதால் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதுமட்டுமல்லாது வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய தேவையற்ற செயற்பாடுகளை தவிர்ப்பதற்காகவும், ஆலயத்தின் புனித தன்மையை பேணுவதற்காகவும் இந்த தடுப்பு வேலி ஆலய முகப்பில் போடப்பட்டுள்ளது. அதெவேளை தற்போது முகப்பில் மட்டுமே வேலி. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பள்ளத்தாக்கிற்குள் விழுந்த மாணவியை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சாரதி..!

  • Mar 20, 2026 - 11:28 AM
  • 0 Comments

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட மாணவர் குழு சுற்றுலா நோக்கில் அந்த பகுதிக்கு சென்றிருந்தது. அப்போது, 23 வயதுடைய மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்துள்ளார். அந்த வேளையில், மாணவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவைச் சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ், “பொடி மல்லி” என […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி..!

  • Mar 20, 2026 - 11:21 AM
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20.03.2026) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, இன்று காலை பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.82 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது. நேற்று ஒரு பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 115 டொலரையும் விட அதிகரித்து காணப்பட்டது. இதேவேளை, WTI மசகு எண்ணெய் பீப்பாயின் விலையும் 93.43 […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு..!

  • Mar 20, 2026 - 10:44 AM
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார். நேற்று (19.03.2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சார வரியை குறைக்க தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்..!

  • Mar 20, 2026 - 10:07 AM
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஏற்றுமதிக்கு அதிக முன்னுரிமை..!

  • Mar 20, 2026 - 09:58 AM
  • 0 Comments

ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வலியுறுத்தல் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் நேற்று (19.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சிறுமி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலி..!

  • Mar 20, 2026 - 09:48 AM
  • 0 Comments

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று (19.03.2026) நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுமியாவார். அவர் தனது பாட்டியுடன் குறித்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிராமவாசிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து குளத்தில் தேடுதல் நடத்திய போது, முதலை அச்சிறுமியை விட்டுவிட்டுச் சென்றுள்ளது. எனினும், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Mar 20, 2026 - 09:43 AM
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp