உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்கா ரஷியாவின் பெயரை கூட உச்சரிக்க பயப்படுகின்றது – உக்ரைன் ஜனாதிபதி

ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.

ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்தனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங், விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது.

எத்தகைய வலிமையான நாடு, எத்தகைய வலிமையான மக்கள். ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷியா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்>எச்சரிக்கை மணியான முதல் தோல்வி…! பஞ்சாப் தலைவர் கருத்து!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp