இந்தியா

தொடரூந்து மறியல் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது

விவசாய விளைபொருளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் 120 நாளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை பஞ்சாப் மாநில காவல்துறை துணை ராணுவப்படை உதவியோடு விவசாயிகள் மீது தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.

இதனைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சிந்தாமணி அருகேயுள்ள காவிரி பாலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் வந்தது.

அதனை நடுப்பாலத்தில் மறித்து விவசாயிகள் முழக்கமிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு , மாநில துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட 20 விவசாயிகளை கைது செய்தனர்.

இப்போராட்டத்தால் வைகை எக்ஸ்பிரஸ் தொடரூந்து சுமார் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது