உலகம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் சிறுநீரக பாதிப்பால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

e0aeaae0aeb0e0aebfe0ae9ae0af81e0aea4e0af8de0aea4 e0aeaae0aebee0aeaae0af8de0aeaae0aeb0e0ae9ae0aeb0e0af8d e0aeaae0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News

கத்தோலிக்க திருச்சபை தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் வாடிகன் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனழே நுரையீரலில் நிமோனியா பாதிப்பு காரணமாக சுவாச பிரச்சினையால் அவதியுற்று வரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் சிறுநீரக பாதிப்பு ஏற்பட துவங்கியுள்ளதாக சமீபத்திய மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் போதிலும், நேற்றிரவு முதல் அவருக்கு சுவாச பிரச்சினை மேலும் அதிகரிக்கவில்லை என்று வாடிகன் தெரிவித்து இருக்கிறது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்ட அறிக்கையால் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் கவலை அடைந்துள்ளனர்.

You may also like

e0aeb9e0aebfe0aeb8e0af8de0aeaae0af81e0aeb2e0af8de0aeb2e0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0aea4e0aeb2e0af88 | Pathivu News
உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp