இந்தியா உலகம்

பிரதமர் மோடியும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும் கட்டியணைத்துக்கொண்டனர்

பாரிஸ்-இல் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்க சென்றிருக்கும் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார்.
இதன்பிறகு நடந்த இரவு விருந்தில் பிரான்ஸ்-இல் உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.

பிரான்ஸ்-இல் ஜனாதிபதி மேக்ரானை சந்தித்தது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”எனது நண்பர் ஜனாதிபதி மேக்ரானை பாரிசில் சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடி பாரிசில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உடன் உரையாடுகிறார்’ என்று தெரிவித்துள்ளது.

இரு நாடுகள் சுற்றுப் பயணமாக முதலில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்துபேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

பாரிசில் யுஐ உச்சி மாநாட்டிற்கு இணை தலைமை தாங்கும் பிரதமர் மோடி, பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். பிறகு வணிகத் தலைவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp