போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதி 19.7 மில்லியன் பெறுமதியில் புனரமைப்பு பணிகள் நேற்று (30.07.2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் Dr.பிரசன்ன குணசேன அவர்களின் பங்கேற்புடன் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr.செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன், கரைதுறைபற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், போக்குவரத்து நெடுஞ்சிலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களின் வடக்கு மாகாண இணைப்பாளர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

