Tuesday, December 24, 2024
Homeஉலகம்நடிகர் தளபதி விஜயின் ரசிகன் மட்டுமே நான் என புஸ்சி ஆனந்த் தெரிவிப்பு

நடிகர் தளபதி விஜயின் ரசிகன் மட்டுமே நான் என புஸ்சி ஆனந்த் தெரிவிப்பு

புஸ்சி ஆனந்த்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார்
அப்போது அவர் தெரிவித்ததாவது
வருகிற வீதியெங்கும் வைக்கப்பட்ட பெனர்கள் மற்றும் வரவேற்பு பதாதைகள் சிறப்பாக இருந்தது.
ஆனால் அதில் ஒன்றில் நிரந்தர பொதுச்செயலாளர் என்று எழுதப்பட்டு இருந்தது.
தலைவர் எனக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் வழங்கியுள்ளார்.
அது நிரந்தரமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நமது தலைவர் தளபதி தான் என புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்திற்கு வரும் போகும் ஆனால் தளபதியோட ரசிகன் என்ற பதவி கடைசி காலம் வரைக்கும் என கடந்த 20 வருடத்துக்கு முன்னர் கூறியதை புஸ்சி ஆனந்த் மீண்டும் நினைவுபடுத்தினார்.
அந்த பதவி தான் இன்று கட்சியின் பொது செயலாளர் என்ற இடத்தில் நிறுத்தி இருக்கின்றது என தெரிவித்த அவர் அதனால் தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது முகவரியே என்பதனை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments