யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண இன்றைய தினம் வியாழக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றறார்
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒஷான் ஹேவா விதாரண தனது கடமைகளை பொறுப்பேற்றறார்
முன்னதாக பெலிசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிமுகம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து மத தலைவர்களின் ஆசிர்வாத்த்துடன் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய மாரப்பன களுத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கேகாலை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய ஒஷான் ஹேவாவிதாரண யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


What’s your Reaction?

