யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டம் தயாரித்தல் தொடர்பான நான்கு நாட்களைக் கொண்ட பயிற்சிச் செயலமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.
சிறு தொழில் முயற்சியாளர்களின் வியாபார அறிவு, முகாமைத்துவத் திறன் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 16 சிறு தொழில் முயற்சியாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 09 சிறு தொழில் முயற்சியாளர்களும் என மொத்தம் 25 பேர் கலந்துகொண்டனர்.
இச்செயலமர்வின் வளவாளர்களாக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) M. Y. தாஸீன், உதவிப் பணிப்பாளர் எஸ். சசீபன் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களான ரி.கிரிகரன், எஸ். கோகுலவாணி, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சசிகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந் நிகழ்வில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் முயற்சியான்மை பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.



What’s your Reaction?

