உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்..!

sammanthurai pradeshiya sabhas 2027 budget passed with majority votes | Pathivu News
சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு சபை மண்டபத்தில் நேற்று (10.11.2026) நடைபெற்றது. இதன்போது 2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தவிசாளரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 13 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 6 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததுடன், 2 உறுப்பினர்கள் எந்தத் தரப்பிற்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். இதனையடுத்து, 7 மேலதிக வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபையில் உத்தியோகபூர்வமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரிச் சேவைகளைக் கருத்திற் கொண்டு பல முக்கிய துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிருபர்
பாறுக் ஷிஹான்

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊