தீபாவளி தினத்தை முன்னிட்டு கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடி சன சமூக நிலையமும் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடத்திய மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் தீபாவளி தினமான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(08.11.2026) இடம்பெற்றன.
கோப்பாய் சன சமூக நிலையத்திலிருந்து ஆரம்பமான போட்டிகள் ஐந்து மைல் தூரத்தை உள்ளடக்கியதாக நடைபெற்றன.
சன சமூக நிலையத் தலைவர் நிசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் உடற்கல்வி விரிவுரையாளர் பா. பாஸ்கரன் மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் சிவா விஜிந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் தனுஷன் முதலாம் இடத்தையும், தர்ஷன் இரண்டாம் இடத்தையும், அக்ஷயன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் வர்ஷிகா முதலாம் இடத்தையும், சதுர்ஸிகா இரண்டாம் இடத்தையும், தீபிகா மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

What’s your Reaction?

