2026ஆம் ஆண்டு மாவீரர் எழுச்சிநாளை முன்னிட்டு, முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (01.11.2026) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணிகளில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து துயிலும் இல்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவினர், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?

