உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நம்பகத்தன்மையை இழக்கும் உள்நாட்டு விசாரணைகள்: செம்மணியில் சர்வதேச தடயவியல் ஆய்வின் அவசியம்..!

domestic investigations losing credibility need for international forensic analysis in chemmani | Pathivu News
மயூரப்பிரியன்
இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது.
செம்மணி சிந்துபாத்தி இந்து மாயான பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் , மூன்று கட்டங்களாக 110 நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 583 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் கைக்குழந்தைகள் , சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என என்புக்கூடுகளாக மீட்கப்பட்டனர்.
என்புக்கூடுகள் மாத்திரமின்றி , சிறுகுழந்தையின் பால்போச்சி , பாடசாலை புத்தகபை , சிறுவர்களின் காலனி , தாயத்து , நாணய குற்றிகள் , வளையல்கள் , செப்பு காசுகள் , மோதிரங்கள் போன்ற சான்று பொருட்களுடன் , மழை அங்கி (ரெயின் கோர்ட்) அணிந்தவறான சிறுவர் ஒருவரின் என்புக்கூடு என்பவையும் மீட்கப்பட்டது.
அவ்வாறாக மனித புதைகுழியில் இருந்து 170 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், செம்மணி புதைகுழியில் என்பு குவியல்களாக 51 என்பு குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மீட்கப்பட்ட என்புகூடுகளில் 41 வீதமானவை சிறுவர்களுடையதாகவும் , 22 வீதமானவை குழந்தைகளுடையதாகவும் , 5 வீதமானவை வளர்இளம் பருவத்தினருடையதாகவும் 30 வீதமானவை பெரியவர்களுடையதாகவும் காணப்பட்டுள்ளன.
அதேவேளை 0.24 மீட்டர் (ஒரு அடியிலும் குறைவானது) ஆழத்திலும் என்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 1.56 மீட்டர் ஆழத்திலும் (மூன்றரை அடி) என்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட என்புகூடுகளில் பெரும்பாலானவற்றின் கைகள் வயிற்றின் மேல் பகுதிகளிலும் சிலது இரு பக்கங்களிலும் காணப்பட்டன. விதிவிலக்காக 227 மற்றும் 429 ஆகிய என்பு கூடுகள் மாத்திரம் உட்கார்ந்த நிலையில் காணப்பட்டுள்ளன
அவ்வாறான நிலையில் , மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் இறுதி கால கட்டத்தில் செம்மணி புதைகுழியை அண்டிய பகுதிகளில் எழுமாற்றாக அகழப்பட்ட 14 சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் , 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில், நீதிமன்றில் அனுமதி கோர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் , செம்மணி அகழ்வு பணிகள் தொடர்பான ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்த தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது, தனது இடைக்கால அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையின் பிரதிகளை பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கும் வழங்குமாறும் மன்று உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் குறித்த அறிக்கை பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகளிடமும் அறிக்கைகள் கையளிக்கப்பட்டன.
அவ்வாறு கையளிக்கப்பட்ட தொல்லியல் பேராசிரியரின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பெரும் சர்ச்சையை தற்போது தோற்றுவித்துள்ளது.
செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் , அணிகலன்கள் , ஆடை துண்டுகள் , சவபெட்டிகளின் சிதைவுகள், பிளாஸ்டிக் மாலை என்பவை அங்கு பல்வேறு கால கட்டங்களில் இறுதி சடங்குகள் நடைபெற்றமைக்கான சான்றாக உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் தொடர்புடைய சூழல் சான்றுகள், முறையான அடக்க முறைகளைக் கொண்டமைக்கான அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது
அடக்கங்களின் செறிவு ஒரு தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரின் விளைவான அடக்கமாக இருக்கலாம். என்றும் தொல்லியல் பேராசிரியர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட என்புகூடுகள் , இயற்கை பேரிடர் அல்லது பெரும் தொற்று காரணமாக மரணித்தவர்கள் என்புகூடுகள் என அறிக்கையில் கூறியுள்ளதாக தற்போது கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன
அதில் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கடந்த 22ஆம் திகதி செம்மணி புதைகுழி வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக மன்றில் அழைத்து, “மனித புதைகுழி ” எனும் சொல்லை தொல்லியல் பேராசிரியர் திட்டமிட்டு , தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டியதுடன் , “வடமாகாண போர் சூழல் ஏன் கவனிக்கப்படவில்லை” என்ற கேள்வியையும் முன் வைத்தனர்
அவ்வாறான நிலையில், ராஜ் சோமதேவாவின் அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியுள்ளது – சுரேஷ் பிரேமசந்திரன்
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ்சோமதேவா, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது
செம்மணிப் பிரதேசம் மிகப்பெருமளவில் புதைகுழிகள் நிறைந்த பிரதேசமாக இருப்பதற்குமான வாய்ப்புகள் இருப்பதை மரண தண்டனைக் கைதியான சோமரட்ண ராஜபக்சவின் கூற்றுகளிலிருந்து அறிய முடிகின்றது.
செம்மணி புதைகுழி தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை தேவை என தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புகள் வலியுறுத்திக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அவற்றிற்கான எத்தகைய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் இப்பொழுது சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளானது இங்கே எத்தகைய இனப்படுகொலைகளும் இடம்பெறவில்லை என்றவிதமான தோற்றப்பாட்டை சர்வதேச சமுதாயம் மத்தியில் ஏற்படுத்துவதற்கான முயற்சியா ?
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினராகிய நாம் செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே அது சாத்தியமானது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
செம்மணி புதைகுழி தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசிமெழுகும் சூழலை உருவாக்க கூடாது. – ஈ.பி.டி.பி
பேராசிரியர் ராஜ் சோமதேவா, இயற்கை பேரிடர் காரணமாக அல்லது தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் என்பு எச்சங்களாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறான கருத்துக்கள் செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய வீரியத்தினை குறைத்து விடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.
பேராசிரியர் ராஜ் சோமதேவா தரப்பினர் ஊகிப்பது போன்ற வாய்ப்புக்கள் இருந்தாலும் அவை விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளிப்படுத்தப்பட வேண்டும்.
காணால் போனவர்களில் கணிசமானவர்களுக்கு என்ன நடந்து என்று தெரியாமல் அவர்களின் உறவுகள் இன்றும் இந்த மண்ணிலே துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே செம்மணி பற்றிய உண்மைகள் வெளிவர வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழி விசாரணையை திசை திருப்பும் செயல்.
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினால் , செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும், நீதி கோருவோரும் இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டனர்
செம்மணி புதைகுழி தொடர்பில், சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்த அரசாங்கம் தயங்குகிறது. குற்றங்களைச் செய்துவிட்டு அதனை மூடிமறைக்க முற்பட்ட முந்தைய முந்தைய அரசாங்கங்கள் போலவே இந்த அரசாங்கமும் செயற்படுகிறது.
அந்த வகையில், இடைக்கால அறிக்கை மூலம் செம்மணி புதைகுழி விடயம் முற்றிலும் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியரின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.
பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையானது எந்தவிதமான ஆய்வுகளோ, மரபணு பரிசோதனைகளோ, தொல்லியல் சம்பந்தமான ஆய்வுகளோ மேற்கொள்ளாது. அதொரு மனித புதைக்குழி என்றதையேயும் குறிப்பிடாமல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கின்றார். நாம் அதை முற்றாக நிராகரிக்கின்றோம்.
இனப்படுகொலையின் சாட்சியமான பெரும் மனித புதைக்குழியாக செம்மணி மனித புதைக்குழி காணப்படுகிறது.
அதனால் தான் நாம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம். புதைகுழி அகழ்வில், சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட வேண்டும், சர்வதேச நீதி கோருவதற்காக சர்வதேசத்தின் தடவியலாளர்களை இங்கு கொண்டுவரப்பட்டு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு பரிசோதனைகளை ஒரு சர்வதேச கண்காணிப்பின் ஊடாகவே அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறோம்.
அவ்வாறான நிலையிலையே பேராசியரின் அறிக்கை இயற்கை பேரிடர் அல்லது பெரும் தொற்றில் மரணித்தவர்கள் என்புக்கூடுகள் என கூறுகிறது. அந்த அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.
எனவே செம்மணி மனித புதைகுழி தொடர்பிலும் , இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை என வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி செம்மணியில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கை செம்மணி விவகாரத்தில் நிலவிய சந்தேகங்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் பல கேள்விகளையும் சர்ச்சைகளையுமே உருவாக்கியுள்ளதுடன் , பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதித்துள்ளன.
அகழ்வாராய்ச்சித் தரவுகள் மீதான இத்தகைய முரண்பாடுகள், உள்நாட்டு விசாரணை முறைகளின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
எனவே நம்பகரமான தடயவியல் ஆய்வு முன்னெடுக்கப்படுவதே காலத்தின் அவசியமாகும்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊