உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அஸ்வெசும பயனாளிகள் பட்டியலிலிருந்து பல லட்சம் பேர் நீக்கம்..!

hundreds of thousands removed from aswesuma beneficiary list | Pathivu News
நலன்புரி நன்மைகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ பயனாளிகளைத் தெரிவு செய்யும் திட்டத்தின் புதிய நடைமுறையின் கீழ் 1,391,830 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
2025.12.15 ஆம் திகதியிட்ட 2497/03 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் ‘தீவிர வறுமைக்கோடு’ (Extreme Poor) மற்றும் ‘வறுமைக்கோடு’ (Poor) ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
இதற்கமைய, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர், மாதாந்தம் 17,500 ரூபாய் கொடுப்பனவு உரித்தாகும் ‘தீவிர வறுமைக்கோடு’ பிரிவின் கீழ் 363,142 பயனாளிகளும், மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு உரித்தாகும் ‘வறுமைக்கோடு’ பிரிவின் கீழ் 628,658 பயனாளிகளுமாக முதலாவது பட்டியலின் கீழ் மொத்தமாக 991,800 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள இரண்டாவது பெயர் பட்டியலில் 740,127 குடும்பங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது தகுதி பெற்றுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களின் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியல் தொடர்பில் ஏதேனும் மேன்முறையீடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், இன்று (29) முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை அதனைச் சமர்ப்பிப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தகவல்களைப் புதுப்பிக்கும் செயல்முறை நிறைவடைந்த பின்னர், தகுதிபெறும் புதிய பயனாளிகளின் இரண்டாவது பெயர் பட்டியலை எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிட நலன்புரி நன்மைகள் சபை எதிர்பார்த்துள்ளது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊