செய்திகள்

மியன்மார் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு அனுமதி மறுப்பு

e0aeaee0aebfe0aeafe0aea9e0af8de0aeaee0aebee0aeb0e0af8d e0ae85e0ae95e0aea4e0aebfe0ae95e0aeb3e0af88 e0aeaae0aebee0aeb0e0af8de0aeb5e0af88 | Pathivu News

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல். டி. பி.தெஹிதெனிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,

மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முலத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்குவது தமது திணைக்களத்தின் ஊடாக அன்றி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் ஊடாகவே என தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகாமில் உள்ள அகதிகளில் 40 இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுவதால், இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகளின் தடையின்றி குறித்த அகதிகளிடம் செல்வதற்கு வசதியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp