செய்திகள்

அநுர அரசு மக்களுக்கு படம் காட்டுகின்றது- சிவாஜிலிங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருக்கின்றது.

அதை விடுத்து பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஜேவிபி என்கிற கட்சியானது தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பல குழப்பங்களைச் செய்து வந்திருந்தனர்.

குறிப்பாக சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கை காலத்தில் இந்த ஜேவிபியினர் செய்தவை எதனையும் தமிழ் மக்கள் மறக்கவில்லையென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்

ஊழல் முறைகேடுகள் அதிகார துஸ்பிரயோகங்கள் திருட்டுக்கள் எனப் பலதைப் பற்றி பேசியும் பலரையும் தம்முடன் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டவர்கள் இப்போது பேசுவதையும் செயற்பட்டு வருவதையும் உரிய முறையில் அவதானிக்க வேண்டும்.

குறிப்பாக பொய்யையும் புரட்டையும் வைத்து எத்தனை நாளுக்குத் தான் தொடர்ந்தும் பயணிக்க முடியும். அவை அனைத்தும் வெளியே வருகிற போது என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp