தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கச்சாய் பொது நூலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி எதிர்வரும் 09.10.2026 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
காலை 9.30மணிக்கு நூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ள இப் போட்டியில் நூலக எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு முன்பள்ளியில் இருந்தும் தலா இரு மாணவர்களை ஆவண செய்யுமாறு நூலகத்தினர் முன்பள்ளி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்போது வர்ணம் தீட்டுவதற்கான படம் நூலகத்தினரால் வழங்கப்படும் எனவும் வர்ணம் தீட்டும் கலர் சோக் மாத்திரம் கொண்டு வருதல் வேண்டும் என நூலகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.


